ரூ.4.33 கோடி மோசடி வழக்கு 'மாஜி' அதிகாரிக்கு 3 'ஆண்டு'

Added : நவ 25, 2022 | |
Advertisement
சென்னை:தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில், 4.33 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், முன்னாள் அதிகாரிக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சென்னை பள்ளிக்கரணையில், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஆராய்ச்சி கப்பல்கள் பராமரிப்பு மற்றும் திட்டத்தை மேற்பார்வையிடும் பணியை, கப்பல் மேலாண்மை

சென்னை:தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில், 4.33 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், முன்னாள் அதிகாரிக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஆராய்ச்சி கப்பல்கள் பராமரிப்பு மற்றும் திட்டத்தை மேற்பார்வையிடும் பணியை, கப்பல் மேலாண்மை பிரிவு மேற்கொள்கிறது.

இதன் குழுத் தலைவராக, 2002 - -2007ம் ஆண்டு காலகட்டத்தில், ஜானகிராமன் என்பவர் பணிபுரிந்தார். நவீன தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள வசதியாக, புதிய கப்பல் கொள்முதலுக்கு, மத்திய அரசு 150 கோடி ரூபாயை, தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு ஒதுக்கியது.

கப்பலை வடிவமைக்கும் பணிக்கான சர்வதேச டெண்டரில், நார்வே நாட்டைச் சேர்ந்த 'விக் சாண்ட்விக்' நிறுவனம் தேர்வானது. இந்த நிலையில், திட்டத்தின் அடிப்படை பணிகளை கூட முடிக்காமல், பணிகளை முடித்தது போல போலி ரசீது தயாரித்து, பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக, சி.பி.ஐ.,க்கு தகவல் கிடைத்தது.

இதன்படி, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், கப்பல் மேலாண்மை பிரிவில் குழு தலைவராக பணிபுரிந்த ஜானகிராமன், தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து, 4 கோடியே 33 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஜானகிராமன், தனியார் நிறுவனம் உரிமையாளர் மீது சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு, மாவட்ட 13வது கூடுதல் சி.பி.ஐ., நீதிமன்ற நீதிபதி மெகபூப் அலிகான் முன் விசாரணையில் உள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி, தனியார் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது.

மோசடியில் தொடர்புடைய ஜானகிராமன் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி, அவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X