நடிகர் சூரியிடம் போலீசார் விசாரணை

Added : நவ 25, 2022 | |
Advertisement
சென்னை:முன்னாள் டி.ஜி.பி., ரமேஷ் குடாவ்லா, தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர், 2.70 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்த நடிகர் சூரியிடம், போலீசார் விசாரித்தனர்.'தமிழக காவல் துறையின், முன்னாள் டி.ஜி.பி., ரமேஷ் குடாவ்லா, திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர், நிலம் வாங்கித் தருவதாக, 2.70 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்து விட்டனர். 'இவர்கள் மீது நடவடிக்கை
 நடிகர் சூரியிடம் போலீசார் விசாரணை

சென்னை:முன்னாள் டி.ஜி.பி., ரமேஷ் குடாவ்லா, தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர், 2.70 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்த நடிகர் சூரியிடம், போலீசார் விசாரித்தனர்.

'தமிழக காவல் துறையின், முன்னாள் டி.ஜி.பி., ரமேஷ் குடாவ்லா, திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர், நிலம் வாங்கித் தருவதாக, 2.70 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்து விட்டனர்.

'இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நடிகர் சூரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். மோசடி புகார் குறித்து, விசரணைக்கு ஆஜராக வேண்டும் என, சூரிக்கு, 'சம்மன்' அனுப்பினர்.

இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன், சூரி நேற்று ஆஜரானார். அவரிடம், மோசடி புகார் குறித்து சில கேள்விகளுக்கு பதில் பெறப்பட்டு, வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது.

இதற்கு முன், மூன்று முறை 'சம்மன்' அனுப்பி, சூரி ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். வழக்கை விரைந்து விசாரித்து, என் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என, போலீசாரிடம் சூரி கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X