தேர்தல் கமிஷனர் நியமனத்தில் அவசரம் ஏன்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!

Added : நவ 25, 2022 | |
Advertisement
புதுடில்லி, 'தேர்தல் கமிஷனராக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அருண் கோயல் நியமனத்தில் இவ்வளவு வேகமாக, அவசரமாக முடிவெடுக்க என்ன அவசியம்' என, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிஉள்ளது. நீதிபதிகள் நியமனத்துக்கு உள்ள, 'கொலீஜியம்' முறையை, தேர்தல் கமிஷனர்கள் நியமனத்திலும் பின்பற்ற உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை,

புதுடில்லி, 'தேர்தல் கமிஷனராக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அருண் கோயல் நியமனத்தில் இவ்வளவு வேகமாக, அவசரமாக முடிவெடுக்க என்ன அவசியம்' என, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிஉள்ளது.

நீதிபதிகள் நியமனத்துக்கு உள்ள, 'கொலீஜியம்' முறையை, தேர்தல் கமிஷனர்கள் நியமனத்திலும் பின்பற்ற உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான நடைமுறைகள் குறித்து, நேற்று முன்தினம் அமர்வு பல கேள்விகளை எழுப்பிஇருந்தது.

தேர்தல் கமிஷனராக அருண் கோயல் சமீபத்தில் நியமிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படியும் அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியதாவது:

தேர்தல் கமிஷனர் நியமனத்தில் என்னென்ன விஷயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன. இந்த விவகாரத்தில் அருண் கோயலின் திறமை குறித்து நாங்கள் சந்தேகப்படவில்லை. ஆனால், நடைமுறை குறித்தே கேள்வி எழுகிறது.


கடும் வாக்குவாதம்கடந்த ௧௯ம் தேதி அவர் விருப்ப ஓய்வில் சென்றார். இதற்கிடையே, அவசர அவசரமாக, நான்கு பேர் பெயர்களை மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதில், அருண் கோயலின் பெயரும் உள்ளது.

இது பற்றிய கோப்பு, துறைகளுக்கு இடையே, ௨௪ மணி நேரத்துக்குள் வேகமாக சென்றுள்ளது. இதைவிட வேகமாக மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கு மிக விரைவாக ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

மின்னல் வேகத்தில் இந்த நடைமுறைகள் முடிந்துள்ளன. தேர்தல் கமிஷனராக அருண் கோயல் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றவர்களின் பெயர்கள் ஏன் பரிசீலிக்கப்படவில்லை. இந்த அளவுக்கு வேகமாக முடிவு எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நான்கு அதிகாரிகளும், தேர்தல் கமிஷன் நியமன விதிகளின்படி, ஆறு ஆண்டுகள் பதவியில் இருக்க மாட்டார்கள். ஆறு ஆண்டுகள் பதவியில் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்தப் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டதா?

இவ்வாறு அமர்வு கூறியது.

இது தொடர்பாக அமர்வுக்கும், மத்திய அரசின் சார் பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ர மணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


பெயர்கள் பரிசீலனைஅட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி வாதிட்டதாவது:

ஏற்கனவே உள்ள விதிகள், நடைமுறைகளின் அடிப்படையிலேயே நியமனம் நடந்துள்ளது. இந்தப் பதவியில் ஆறு ஆண்டுகள் இருக்க முடியுமா என்பது குறித்து கவலைப்படத் தேவையில்லை.

தேர்தல் கமிஷன் பதவிக்கு தகுதியானவர்களா என்பதே முக்கியம். அதன்படியே இவர்களுடைய பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்த நியமனத்தை மேலோட்டமாக பார்க்காமல் முழுமையாக ஆய்வு செய்தால், தேர்தல் கமிஷனராக அருண் கோயல் நியமிக்கப்பட்டதற்கான காரணம் தெரியவரும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

அவர் வாதிடும்போது, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் குறுக்கிட முயன்றார். அப்போது, 'உங்கள் வாயை மூடுங்கள்' என, அட்டர்னி ஜெனரல் கோபமாக குறிப்பிட்டார்.

அனைத்து தரப்பும் தங்களுடைய வாதங்களை, ஒரு வாரத்துக்குள் எழுத்து பூர்வமாக சமர்ப்பிக்க அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

காங்கிரஸ் விமர்சனம்

இது குறித்து காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கேரா கூறியுள்ளதாவது:அவசர கோலத்தில் தேர்தல் கமிஷனர் நியமனம் நடந்துள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது புதிதல்ல; வழக்கமாகவே, எந்த நியமனமாக இருந்தாலும், முடிவாக இருந்தாலும், பிரதமர் மோடி தலைமையிலான அரசு அவசர அவசரமாகவே எடுக்கும். எவ்வித ஆலோசனை, கருத்து கேட்பு இல்லாமல், நடைமுறைகள் மற்றும் அரசியல் சாசன விதிகளை மீறுவது மோடி அரசின் வாடிக்கை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X