கூட்டுறவு சங்க, ரேஷன் ஊழியர்களுக்கு மகளிர் குழு கடன் தள்ளுபடி கிடையாது

Added : நவ 25, 2022 | |
Advertisement
கோவை:கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி கிடையாது என்பதால், அவர்களது 'ஆதார்' மற்றும் ரேஷன் கார்டு நகல் சேகரிக்கப்படுகிறது.'கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவி குழுவினர் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும்' என, சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.தி.மு.க.,

கோவை:கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி கிடையாது என்பதால், அவர்களது 'ஆதார்' மற்றும் ரேஷன் கார்டு நகல் சேகரிக்கப்படுகிறது.

'கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவி குழுவினர் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும்' என, சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மகளிர் குழுவினர் பெற்ற கடன், 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. முதல்கட்டமாக, 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், கூட்டுறவுத்துறை தணிக்கை பிரிவு ஆய்வு முழுமையாக முடியாததால், மகளிர் குழுவினருக்கு இன்னும் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.

இக்குழுவினர் ஏற்கனவே நகைக்கடன் தள்ளுபடி பெற்றுள்ளனரா என, உறுப்பினர்களின் ஆதார் நகல் பெறப்பட்டு, சரிபார்க்கப்பட்டது.

நகைக்கடன் தள்ளுபடி செய்தபோது விதித்த நிபந்தனைகளை போல, 'கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் மகளிர் குழு கடன் தள்ளுபடி பெற தகுதியில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கூட்டுறவு சங்க பணியாளர்கள், ரேஷன் கடை ஊழியர்களின் ஆதார் நகல் மற்றும் ரேஷன் கார்டு நகல் பெறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கூட்டுறவு சங்க ஊழியர்கள் கூறுகையில், 'மகளிர் குழு கடன் தள்ளுபடி செய்வதற்கான தணிக்கைத்துறை ஆய்வு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

கூட்டுறவு ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களில் யாராவது, மகளிர் குழுவில் அங்கத்தினராக இருந்து கடன் பெற்றிருந்தால், அவர்களுக்கு தள்ளுபடி கிடைக்காது' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X