'ஏத்தர்' உற்பத்தி ஆலை துவக்கம் மின்சார பைக்குகள் தயாரிக்கவும் திட்டம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
ஒசூர், 'ஏத்தர் எனர்ஜி' நிறுவனம், அதன் இரண்டாவது புதிய உற்பத்தி ஆலையை, ஓசூர் பகுதியில் துவங்கியுள்ளது. 3 லட்சம் சதுர அடி கொண்ட இந்த ஆலையின் வாயிலாக, 4.20 லட்சம் ஸ்கூட்டர்களை ஒரே ஆண்டில் தயாரிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.தற்போது, ஆண்டிற்கு 1.2 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரித்து வரும் ஏத்தர் நிறுவனம், பேட்டரி மற்றும் ஸ்கூட்டர்கள் தயாரிப்பதற்கென, தனித்தனி
  'ஏத்தர்' உற்பத்தி ஆலை துவக்கம் மின்சார பைக்குகள் தயாரிக்கவும் திட்டம்



ஒசூர், 'ஏத்தர் எனர்ஜி' நிறுவனம், அதன் இரண்டாவது புதிய உற்பத்தி ஆலையை, ஓசூர் பகுதியில் துவங்கியுள்ளது. 3 லட்சம் சதுர அடி கொண்ட இந்த ஆலையின் வாயிலாக, 4.20 லட்சம் ஸ்கூட்டர்களை ஒரே ஆண்டில் தயாரிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது, ஆண்டிற்கு 1.2 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரித்து வரும் ஏத்தர் நிறுவனம், பேட்டரி மற்றும் ஸ்கூட்டர்கள் தயாரிப்பதற்கென, தனித்தனி பிரிவுகளை உருவாக்கி, இந்த புதிய ஆலையை கட்டமைத்துள்ளது.

இதுகுறித்து, ஏத்தர் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஸ்வப்னில் ஜென் கூறியதாவது:

நாட்டு மக்களுக்கு நம்பகமான, தரமான மின்சார ஸ்கூட்டர்களை வழங்க வேண்டும் என்ற முனைப்புடன் ஒவ்வொரு அடியாக, தயாரிப்பு ஆலைகளை விரிவுபடுத்தி வருகிறோம். இந்த புதிய ஆலையின் உதவியுடன், 10 மடங்கு குறைந்த நேரத்தில், 4 மடங்கு அதிகமான ஸ்கூட்டர்களை தயாரிக்க முடியும். பாதுகாப்பு மற்றும் தரத்தை கூட்ட, 1,500க்கும் மேற்பட்ட சோதனைகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.

எதிர்காலத்தில் மின்சார பைக்குகளை தயாரிக்கும் திட்டம் உள்ளது. ஆனால், 1 லட்சம் ரூபாய்க்கு கீழ், ஏத்தர் நிறுவனம் வாகனங்களை தயாரிப்பதாக இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X