இன்று முதல் 28 வரை மழை

Added : நவ 25, 2022 | |
Advertisement
சென்னை:'தமிழக பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், சில இடங்களில் மிதமான மழை பெய்யும்' என அறிவிக்கப்பட்டு உள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தெற்கு ஆந்திரா மற்றும் அதையொட்டி உள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வட தமிழகத்தின் மேல் நகர்ந்துள்ளது. பின், வளி மண்டல கீழடுக்கு சுழற்சியாக வலுவிழந்து நிலவுகிறது.இதன்

சென்னை:'தமிழக பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், சில இடங்களில் மிதமான மழை பெய்யும்' என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு ஆந்திரா மற்றும் அதையொட்டி உள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வட தமிழகத்தின் மேல் நகர்ந்துள்ளது. பின், வளி மண்டல கீழடுக்கு சுழற்சியாக வலுவிழந்து நிலவுகிறது.

இதன் காரணமாக, வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இன்று முற்பகல் வரை, மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடனும், லேசான பனி மூட்டத்துடனும் காணப்படும். அதிகபட்சம், 30 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகும்.

இன்று பிற்பகல் முதல் 28ம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை. நேற்று காலை நிலவரப்படி, தாமரைபாக்கத்தில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது. திருத்தணி, காஞ்சிபுரம், 7; கரூர், வந்தவாசி, 5 செ.மீ., மழை பெய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X