வியாபாரி உறுப்பு தானம் ஆறு பேருக்கு மறுவாழ்வு

Added : நவ 25, 2022 | |
Advertisement
சேலம்:விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பழ வியாபாரியின் உடல் உறுப்புகளை தானம் வழங்க அவரது குடும்பத்தினர் முன்வந்ததால், ஆறு பேருக்கு, மறுவாழ்வு கிடைக்க உள்ளது.சேலம், அய்யம்பெருமாம்பட்டி, ராமகவுண்டர் காடு, அன்னை நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி, 55. சேலம், மூன்று ரோட்டில் பழக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ஜீவா, 47. இவர்களது மகள் கீர்த்திகா, 26, மகன் ஹரிஹரன், 25.கடந்த, 18ம் தேதி காலை,

சேலம்:விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பழ வியாபாரியின் உடல் உறுப்புகளை தானம் வழங்க அவரது குடும்பத்தினர் முன்வந்ததால், ஆறு பேருக்கு, மறுவாழ்வு கிடைக்க உள்ளது.

சேலம், அய்யம்பெருமாம்பட்டி, ராமகவுண்டர் காடு, அன்னை நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி, 55. சேலம், மூன்று ரோட்டில் பழக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ஜீவா, 47. இவர்களது மகள் கீர்த்திகா, 26, மகன் ஹரிஹரன், 25.

கடந்த, 18ம் தேதி காலை, 7:20 மணிக்கு வீட்டில் இருந்து பெரியசாமி, 'டி.வி.எஸ்., எக்ஸல் சூப்பர்' மொபட்டில் கடைக்கு புறப்பட்டார்.

சிறிது துாரம் சென்றதும் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.

உறவினர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவரின் மூளை செயலிழந்ததாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது குடும்பத்தினர், உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். அதன்படி தலா இரு சிறுநீரகங்கள், நுரையீரல்கள், கண்கள் எடுக்கப்பட்டன.

சேலம் அரசு மருத்துவமனை டீன் வள்ளி கூறியதாவது:

பழ வியாபாரி உடலில் எடுக்கப்பட்ட சிறுநீரகத்தில் ஒன்று, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிக்கு பொருத்தப்பட்டது.

கண்கள், நுரையீரல் உள்ளிட்டவை, சென்னை, கோவை, மதுரைக்கு அனுப்பப்பட்டன. இந்த மருத்துவமனையில், 2020 முதல் இதுவரை, மூளைச்சாவு அடைந்த ஏழு பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, நோயாளிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது.

அனைவரும் உறுப்புகளை தானம் வழங்கி, பிற உயிர்களை காப்பாற்ற முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உறுப்பு தானத்திற்கு முன்வந்த பழ வியாபாரி குடும்பத்தினரை, மருத்துவர்கள், செவிலியர், மருத்துவ பணியாளர்கள் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X