கணவனை கொல்ல ஆள் அனுப்பிய மனைவி சிக்கியது எப்படி? சி.பி.சி.ஐ.டி., விசாரணை கேட்டு நாடகமாடியது அம்பலம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
மதுரை:மதுரையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற விவகாரத்தில், போலீஸ் கவனத்தை திசை திருப்ப, சி.பி.சி.ஐ.டி., விசாரணை கேட்டு மனைவி நாடகமாடியது தெரிய வந்துள்ளது.மதுரை, திருப்பாலை, பி.வி.கே.ஆர்., நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 37; மஸ்கட் நாட்டில் பொறியாளராக பணிபுரிந்தார். இவரது மனைவி வைஷ்ணவி, 25. திருமணத்திற்கு முன்பே மாமா மகன்
 கணவனை கொல்ல ஆள் அனுப்பிய மனைவி சிக்கியது எப்படி? சி.பி.சி.ஐ.டி., விசாரணை கேட்டு நாடகமாடியது அம்பலம்

மதுரை:மதுரையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற விவகாரத்தில், போலீஸ் கவனத்தை திசை திருப்ப, சி.பி.சி.ஐ.டி., விசாரணை கேட்டு மனைவி நாடகமாடியது தெரிய வந்துள்ளது.

மதுரை, திருப்பாலை, பி.வி.கே.ஆர்., நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 37; மஸ்கட் நாட்டில் பொறியாளராக பணிபுரிந்தார்.

இவரது மனைவி வைஷ்ணவி, 25. திருமணத்திற்கு முன்பே மாமா மகன் சிவகங்கையைச் சேர்ந்த வெங்கடேசனை காதலித்தார். பெற்றோர் எதிர்ப்பால் திருமணம் செய்ய முடியவில்லை.

செந்தில்குமாரை திருமணம் செய்ததும், அவர் வெளிநாட்டிற்கு வேலைக்க சென்றது வைஷ்ணவிக்கு வசதியாகிவிட்டது; அடிக்கடி வெங்கடேசனை சந்தித்தார்.

கடந்த செப்டம்பரில் ஊர் திரும்பிய செந்தில்குமார், இனி குடும்பத்துடன் இருக்கப் போவதாக தெரிவித்தார்.

இதனால், தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பார் எனக்கருதி, செந்தில்குமாரை கொலை செய்ய வைஷ்ணவியும், வெங்கடேசனும் திட்டமிட்டனர்.

அக்., 27ல் டூ - வீலரில் வந்த செந்தில்குமாரை, கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்தனர்.

இவ்வழக்கில் இருவரையும், கூலிப்படையைச் சேர்ந்த ஒருவரையும் தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே, போலீசாரின் கவனத்தை திசை திருப்பும் வகையில், தன் கணவரை கொல்ல முயன்ற வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வைஷ்ணவி மனு செய்தார்.

அந்த மனு விசாரணைக்கு வரும் முன்பே, அவர் கைது செய்யப்பட்டதால், நாடகம் முடிவுக்கு வந்தது.


சந்தேகம் ஏன்?



போலீசார் கூறியதாவது:

சம்பவத்தன்று செந்தில்குமார் வெட்டப்பட்டு கிடந்த போது, அங்கு வந்த வைஷ்ணவி பதட்டம் அடையாமல், மொபைல் போனில் யாருக்கோ, 'மெசேஜ்' அனுப்புவதில் ஆர்வம் காட்டினார். இது தான் எங்களுக்கு கிடைத்த முதல் 'க்ளூ!'

அவரை விசாரணைக்கு அழைத்த போது வர மறுத்துவிட்டார். இது ஒருபுறமிருக்க, செந்தில்குமாரோ, 'சொத்து பிரச்னையில் என் அண்ணன் நவநீதகிருஷ்ணன் கொலை செய்ய முயற்சித்தார்; அவரை கைது செய்யுங்கள்' என, தொடர்ந்து எங்களிடம் கூறி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தார்.

வைஷ்ணவி மீது சந்தேகம் உள்ளது என நாங்கள் கூறியபோது, அதை கணவர் நம்ப மறுத்தார். இச்சூழலில் தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, சி.பி.சி.ஐ.டி., விசாரணை கேட்டு, உயர் நீதிமன்றத்தில் வைஷ்ணவி மனு செய்தார்.

அந்த மனு விசாரணைக்கு வருவதற்குள் அவரது மொபைல் போனை ஆய்வு செய்ததில், வெங்கடேசனுடன் அவர் தொடர்பில் இருந்தது உறுதியானது. இதன் அடிப்படையில் இருவரையும் விசாரித்த போது, உண்மையை ஒப்புக்கொண்டனர்.

செந்தில்குமாரிடம், 'உண்மையில் என்ன நடந்தது' என்று, வைஷ்ணவியை வைத்தே அவரிடம் சொல்ல வைத்தோம். அவரிடம், 'சாரி மாமா... தெரியாம தப்பு பண்ணிட்டேன்' என, வைஷ்ணவி மன்னிப்பு கேட்டார்.

அப்போதும், அவர் மீது கோபப்படாத செந்தில்குமார், 'இன்னும் நீ சின்ன பிள்ளைனு நிரூபிச்சிட்டே இருக்கே' எனக் கூறியவர், 'கவலைப்படாதே, உன்னை விரைவில் ஜாமினில் எடுக்கிறேன்' என, ஆறுதல் கூறினார்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X