ஏற வேண்டிய உயரத்துக்கு தமிழ் ஏறவில்லை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வேதனை!

Added : நவ 25, 2022 | |
Advertisement
தஞ்சாவூர்:''தமிழ் அனைத்து பெருமைகளையும் கொண்டிருந்தாலும், அது ஏற வேண்டிய உயரத்துக்கு இன்னும் ஏற முடியாமல் உள்ளது,'' என, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தெரிவித்தார்.தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர் மையம், மணப்பாறை பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை மையம் சார்பில், பேசும் கலை, எழுதும் கலை பட்டயப் படிப்பு அறிமுக விழா நேற்று முன்தினம் நடந்தது. பல்கலைகழக

தஞ்சாவூர்:''தமிழ் அனைத்து பெருமைகளையும் கொண்டிருந்தாலும், அது ஏற வேண்டிய உயரத்துக்கு இன்னும் ஏற முடியாமல் உள்ளது,'' என, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தெரிவித்தார்.

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர் மையம், மணப்பாறை பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை மையம் சார்பில், பேசும் கலை, எழுதும் கலை பட்டயப் படிப்பு அறிமுக விழா நேற்று முன்தினம் நடந்தது.

பல்கலைகழக துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமையில் நடந்த விழாவில், புதிய பாடத்திற்கான நுால்களை வெளியிட்ட குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது:

தமிழர்களுக்கு பேசுவது கலை மட்டுமல்ல, அது வாழ்க்கையின் உயிர்த் துடிப்பு. உறவுகளை, உணர்வுகளை வார்த்தைகளால், மொழியால், உடல் அசைவால் வெளிப்படுத்தும் தனித் திறமை தமிழ் மொழிக்கு மட்டுமே உள்ளது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், எந்தத் தனி மனிதனுக்கும் துதி பாடாமல், எந்தச் சமயத்தின் அடையாளத்தையும் பூசிக் கொள்ளாமல், உலக மானுடத்துக்காகவே பேசப்பட்ட, பாடப்பட்ட ஒரு அற இலக்கியம் திருக்குறள் மட்டுமே.

அனைத்து பெருமைகளையும் தமிழ் மொழி கொண்டிருந்தாலும், அது ஏற வேண்டிய உயரத்துக்கு இன்னும் ஏற முடியாத நிலையில் இருக்கிறது.

தொடர்புக்கு, பேச்சுக்கு, எழுத்துக்கு என தமிழுக்கு இயல்பாகவே சொற்குவியல்கள் ஏராளம். மற்ற மொழிகளில் மரபுத்தன்மை இல்லாமல், செயற்கைத் தன்மை இருக்கும்.

தகவல் தொடர்பில், தமிழுக்கு மட்டும் தான் தனித்தன்மை இருக்கிறது.

எப்படி, எதைப் பேச வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். எல்லாவற்றையும் விட பேச்சில் உண்மையும், நேர்மையும், சத்தியமும் இருக்க வேண்டும். பேச்சைப் போல எழுத்தும் அப்படித் தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X