சுகப்பிரசவம் அதிகரிக்க அரசு நடவடிக்கை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

Added : நவ 25, 2022 | |
Advertisement
புதுக்கோட்டை:''அறுவை சிகிச்சையை குறைத்து, சுகப்பிரசவம் அதிகரிக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' என, புதுக்கோட்டையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில், 2.13 கோடி ரூபாய் மதிப்பில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஏழு மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டடங்களை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று

புதுக்கோட்டை:''அறுவை சிகிச்சையை குறைத்து, சுகப்பிரசவம் அதிகரிக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' என, புதுக்கோட்டையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில், 2.13 கோடி ரூபாய் மதிப்பில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஏழு மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டடங்களை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.

மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமை வகித்தார்.

கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

நீண்ட இடைவெளிக்கு பின், தமிழகத்தில், 25 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 அரசு நகர்புற சுகாதார நிலையங்கள் துவங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

'தமிழகத்தில், 708 நகர்புற நலவாழ்வு மையங்கள் துவங்கப்படும்' என, முதல்வர் அறிவித்திருந்தார்.

அரசு நகர்புற நல வாழ்வு மையங்கள் கட்ட தலா, 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 21 மாநகராட்சிகளிலும், 63 நகராட்சிகளிலும் இந்த மருத்துவமனைகள் துவங்கப்பட உள்ளன.

இங்கிலாந்து ராயல் மருத்துவமனையில் இருப்பது போல, தமிழகத்தில் உள்ள, 36 பெரிய அரசு மருத்துவமனைகளிலும் அறுவை சிகிச்சையின் போது, 'செக் லிஸ்ட் டிஜிட்டலைஸ்' செய்யப்பட உள்ளது.

அறுவை சிகிச்சை வாயிலாக குழந்தை பிறப்பை தடுப்பதற்கு, ஒன்றரை ஆண்டில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மகப்பேறுக்கு வரும் கர்ப்பிணியருக்கு யோகா உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இந்த நடவடிக்கைகளால், சிசேரியன் அறுவை சிகிச்சையால் குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலை குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X