விவசாயத்துக்கு மின் இணைப்பு கிருஷ்ணகிரிக்கு அதிக ஒதுக்கீடு

Added : நவ 25, 2022 | |
Advertisement
சேலம்:விவசாயத்துக்கு வழங்கப்படும் மின் இணைப்பில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரிக்கு, 4,969 இணைப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு மின் உற்பத்தி, மின் பகிர்மான கழகம் சார்பில், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு, மின் இணைப்பு வழங்கும் திட்டம், கடந்த, 11ல் கரூரில் துவங்கப்பட்டது. அன்று முதல், 100 நாளுக்குள், கூடுதல் மின் இணைப்பு வழங்கும் பணி முடிக்கப்படும் என, அரசு தரப்பில்

சேலம்:விவசாயத்துக்கு வழங்கப்படும் மின் இணைப்பில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரிக்கு, 4,969 இணைப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி, மின் பகிர்மான கழகம் சார்பில், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு, மின் இணைப்பு வழங்கும் திட்டம், கடந்த, 11ல் கரூரில் துவங்கப்பட்டது.

அன்று முதல், 100 நாளுக்குள், கூடுதல் மின் இணைப்பு வழங்கும் பணி முடிக்கப்படும் என, அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வட்டம் வாரியாக வழங்கப்படும் மின் இணைப்பு எண்ணிக்கை விபரம்:

சேலம் மின் வட்டத்தில், 1,088 இணைப்பு வழங்கப்படும்.

அதேபோல மேட்டூர், 1,599, ஈரோடு, 1,120, கோபி, 1,708, கரூர், 551, திருவண்ணாமலை, 914, நாமக்கல், 2,455, வேலுார், 998, திருப்பத்துார், 1,668, பெரம்பலுார், 1,584, திண்டுக்கல், 1,798.

கள்ளக்குறிச்சி, 2,350, தேனி, 1,237, கோவை வடக்கு, 457; தெற்கு, 1,046, திருப்பூர், 497, பல்லடம், 2,926, உடுமலைப்பேட்டை, 1,985 மின் இணைப்பு வழங்கப்படுகிறது.

அதில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரிக்கு, 4,969, அதற்கு அடுத்து தர்மபுரி, 4,486 மின் இணைப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் சேர்த்து தமிழகம் முழுதும், 50 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X