மெரினாவில் அடுத்தடுத்து7 கடைகளில் கொள்ளை

Added : நவ 25, 2022 | |
Advertisement
சென்னை:மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை, அண்ணா, எம்.ஜி.ஆர்., நினைவிடம் பகுதியில் 480க்கும் அதிகமான சிறு கடைகள் உள்ளன.வியாபாரிகள் கடைகளை திறக்க வந்த போது, திருவல்லிக்கேணியை பீர்முகமது, 30, என்பவரின் கைகடிகார கடையின் பூட்டை உடைத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டிருந்தது.இதேபோல, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஷேக் நைனா முகமது, 42, என்பவரின்

சென்னை:மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை, அண்ணா, எம்.ஜி.ஆர்., நினைவிடம் பகுதியில் 480க்கும் அதிகமான சிறு கடைகள் உள்ளன.

வியாபாரிகள் கடைகளை திறக்க வந்த போது, திருவல்லிக்கேணியை பீர்முகமது, 30, என்பவரின் கைகடிகார கடையின் பூட்டை உடைத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டிருந்தது.

இதேபோல, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஷேக் நைனா முகமது, 42, என்பவரின் கடையில், 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடுபோனது.

சேப்பாக்கம் சின்ன தம்பி தெருவைச் சேர்ந்த தஸ்தகீர், 49, என்பவரது கடையில் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களும், பெரம்பூர் இஸ்மாயில் தெருவைச் சேர்ந்த பஷீர் அலி என்பவரது கடையில் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடு போயிருந்தன.

மேலும், அசோக் என்பவரது கடையில் 10 ஆயிரம் மதிப்பு பொருட்கள், அஞ்சலை என்பவரது பேன்சி கடையில் 5,௦௦௦ ஆயிரம் மதிப்பு பொருள், மேடவாக்கத்தைச் சேர்ந்த துரைராஜ், 48, என்பவரது கடையில் 7,௦௦௦ ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டிருந்தன.

வியாபாரிகள், அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X