கீழடியில் சொத்து விபரம் சேகரிப்பு நில உரிமையாளர்கள் அதிருப்தி

Added : நவ 25, 2022 | |
Advertisement
திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வுக்கு நிலம் வழங்கிய உரிமையாளர்களின் சொத்து விபரங்களை வருவாய்த்துறையினர் சேகரிப்பதால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.கீழடியில் அகழாய்வு பணிகளுக்காக நான்கரை ஏக்கர் நிலம் 17 விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டு நடந்து முடிந்துள்ளது.அகழாய்வு நடந்த இடங்களை திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்ற நில உரிமையாளர்களிடம் அரசு

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வுக்கு நிலம் வழங்கிய உரிமையாளர்களின் சொத்து விபரங்களை வருவாய்த்துறையினர் சேகரிப்பதால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

கீழடியில் அகழாய்வு பணிகளுக்காக நான்கரை ஏக்கர் நிலம் 17 விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டு நடந்து முடிந்துள்ளது.

அகழாய்வு நடந்த இடங்களை திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்ற நில உரிமையாளர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அவர்களின் சொத்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

நில உரிமையாளர்கள் கூறியதாவது:

நான்கு வழிச்சாலையை ஒட்டி ஒரு சென்ட் நிலம் 4 முதல் 5 லட்ச ரூபாய் வரை விற்பனையாகிறது. நாங்கள் மூன்று லட்ச ரூபாய் கேட்டோம். அரசு தரப்பில் வெறும் 40 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்த நிலையில் திடீரென எங்களின்வீடு, நிலம், வாகனம், அலைபேசி, குழந்தைகள் ,அவர்களின் படிப்பு உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் வருவாய்த்துறையினர் சேகரித்து வருகின்றனர். பண்டைய தமிழர்கள் பற்றிய ஆவணங்களை தேட உதவியதற்கு எங்களுக்கு தரும் பரிசு எங்களின் வாழ்வாதாரத்தை அழிப்பது தான் போல. பரம்பரை பரம்பரையாக இதனை வைத்து விவசாயம் செய்து வருகிறோம். தென்னை மரங்கள் அனைத்தும் 40 ஆண்டு காலமானவை. அரசின் இந்த செயலால் நாங்கள் அதிருப்தியில் உள்ளோம், என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X