சபரிமலை அன்னதானத்தில் 'புலாவ்'அனைத்து மாநில பக்தர்கள் திருப்தி

Added : நவ 25, 2022 | |
Advertisement
சபரிமலை:அனைத்து மாநில பக்தர்களை திருப்திப்படுத்தும் வகையில் சபரிமலை அன்னதானத்தில் 'புலாவ்' வழங்குவது வரவேற்பு பெற்றுள்ளது.சபரிமலை பக்தர்கள் ஒரே நேரத்தில் இரண்டாயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் அன்னதான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் இந்த அன்னதானத்தை தங்கள் நன்கொடையாக வழங்க

சபரிமலை:அனைத்து மாநில பக்தர்களை திருப்திப்படுத்தும் வகையில் சபரிமலை அன்னதானத்தில் 'புலாவ்' வழங்குவது வரவேற்பு பெற்றுள்ளது.

சபரிமலை பக்தர்கள் ஒரே நேரத்தில் இரண்டாயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் அன்னதான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் இந்த அன்னதானத்தை தங்கள் நன்கொடையாக வழங்க விரும்பினால் ஒரு நேரத்துக்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும். காலையில் உப்புமா, மதியம் சாப்பாடு, இரவு கஞ்சி அல்லது உப்புமா வழங்கப்பட்டது. கேரளா ஸ்டைலில் தயாரிக்கப்படும் சோறு, சாம்பார், அவியலை தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநில பக்தர்கள் விரும்பவில்லை. வந்து சாப்பாடு வாங்கி விட்டு அதை துார கொட்டி செல்வது நடந்தது.

இதையடுத்து மதிய சாப்பாடு ஸ்டைலை தேவசம்போர்டு மாற்றியுள்ளது. மதியம் தற்போது 'புலாவ்' வழங்கப்படுகிறது. இதை கேரளா உள்ளிட்ட அனைத்து மாநில பக்தர்களும் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனுடன் சாலட் மற்றும் குருமா வழங்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகள் அதிகளவில் விரும்பி சாப்பிடுவதாக தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அன்னதான மண்டபத்தில் இதற்கான நன்கொடை பெறப்படுகிறது. சிறிய அளவிலான தொகை முதல் பெரிய தொகை வரை செலுத்தலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X