பிறழ் சாட்சியை ஆஜர்படுத்த உத்தரவு கோகுல்ராஜ் கொலை வழக்கில் அதிரடி

Added : நவ 25, 2022 | |
Advertisement
மதுரை:ஓமலுார் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில், பிறழ் சாட்சியாக மாறிய பெண்ணை, இன்று ஆஜர்படுத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.சேலம் மாவட்டம், ஓமலுார் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவரும் உடன் படித்த நாமக்கல்லைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணும் பழகினர்.இருவரும், 2015ல் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் கோவிலுக்குச் சென்று பேசிக்

மதுரை:ஓமலுார் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில், பிறழ் சாட்சியாக மாறிய பெண்ணை, இன்று ஆஜர்படுத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.

சேலம் மாவட்டம், ஓமலுார் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவரும் உடன் படித்த நாமக்கல்லைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணும் பழகினர்.

இருவரும், 2015ல் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் கோவிலுக்குச் சென்று பேசிக் கொண்டிருந்தனர். இரவு கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை.

நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை, உடல் வேறாக சடலமாக அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.


மேல்முறையீடு



நாமக்கல் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர். நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு படி, மதுரை நீதிமன்றத்திற்கு விசாரணை மாற்றப்பட்டது.

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே ஆவாரம்பாளையம் தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், சங்கர் உட்பட ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மார்ச், 8ல் மதுரை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து யுவராஜ் உட்பட, 10 பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனர். அது போல, வழக்கிலிருந்து ஐந்து பேரை விடுதலை செய்ததை எதிர்த்து, கோகுல்ராஜின் தாய் சித்ரா மற்றும் சி.பி.சி.ஐ.டி., தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு அந்த மனுக்களை விசாரித்து நேற்று வழங்கிய உத்தரவு:

கீழமை நீதிமன்ற விசாரணையின் துவக்க கட்டத்தில், அரசு தரப்பு முக்கிய சாட்சியாக பெண் இருந்துள்ளார். அவரது வாக்குமூலம் கீழமை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. பின், அவர் பிறழ் சாட்சியாக மாறியுள்ளார்.

இடைப்பட்ட நேரத்தில் ஏதோ நடந்துள்ளதாக தெரிகிறது. சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறுவது தற்போது வழக்கமாகி விட்டது.

முக்கிய சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறும்போது, நீதிமன்றங்கள் மவுனமாக பார்வையாளர்களாக இருந்தால் அது நீதி பரிபாலன முறைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.


நடவடிக்கை



தற்போது அந்த பெண், நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கிறார். அவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்பு வழங்க நாமக்கல் மாவட்ட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவரை சந்திக்கவோ அல்லது அவரையும், அவரது குடும்ப உறுப்பினர்களையும் வேறு யாரும் மொபைல் போனில் தொடர்பு கொள்ளவும் போலீசார் அனுமதிக்கக் கூடாது.

குறிப்பிட்ட அந்த பெண் மனதில் எந்த பயமும் இல்லாமல், இந்த நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக, பாதுகாப்பு வழங்குவதை போலீசார் உறுதி செய்ய வேண்டும். அவரை இன்று நீதிபதிகள் அறையில் ஆஜர்படுத்த வேண்டும். பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X