தேயிலை எஸ்டேட்டில் குட்டிகளுடன் யானைகள் முகாம் 'டான்டீ' தொழிலாளர்கள் ஓட்டம்

Added : நவ 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
வால்பாறை:சின்கோனா 'டான்டீ' தேயிலை தோட்டத்தில், பகல் நேரத்தில் தேயிலை காட்டில் யானைகள் முகாமிட்டதால், தொழிலாளர்கள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர்.வால்பாறையை சுற்றியுள்ள சங்கிலி ரோடு, இஞ்சிப்பாறை, ஊசிமலை, சின்கோனா, வறட்டுப்பாறை, சோலையாறு, வாகமலை, அக்காமலை உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.நேற்று
 தேயிலை எஸ்டேட்டில் குட்டிகளுடன் யானைகள் முகாம் 'டான்டீ' தொழிலாளர்கள் ஓட்டம்

வால்பாறை:சின்கோனா 'டான்டீ' தேயிலை தோட்டத்தில், பகல் நேரத்தில் தேயிலை காட்டில் யானைகள் முகாமிட்டதால், தொழிலாளர்கள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர்.

வால்பாறையை சுற்றியுள்ள சங்கிலி ரோடு, இஞ்சிப்பாறை, ஊசிமலை, சின்கோனா, வறட்டுப்பாறை, சோலையாறு, வாகமலை, அக்காமலை உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.

நேற்று முன்தினம் சின்கோனா 'டான்டீ' முதல் பிரிவு எஸ்டேட்டில், அதிகாலை நேரத்தில் முகாமிட்ட யானைகள் ரேஷன் கடை கதவை சேதப்படுத்தி, அரிசி மூட்டைகளை வெளியே இழுத்து சேதப்படுத்தின.

இந்நிலையில், சின்கோனா 'டான்டீ' தேயிலை தோட்டத்தில், நேற்று அதிகாலை குட்டிகளுடன் யானைகள் முகாமிட்டன. இதை கண்ட தொழிலாளர்கள் தேயிலை பறிக்க முடியாமல் ஓட்டம் பிடித்தனர்.

வனத்துறையினர் கூறியதாவது:

வால்பாறையில் பருவமழைக்கு பின், வன வளம் செழுமையாக காட்சியளிப்பதால், யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாலை, 6:00 மணி முதல் காலை, 6:00 மணி வரை, யானைகள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மக்கள் நடந்து செல்ல வேண்டாம்.

குறிப்பாக, யானைகள் முகாமிட்டுள்ள பகுதியில், இருசக்கர வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். யானைகள் நடமாடும் பகுதியில், தொழிலாளர்கள் தேயிலை பறிக்க எஸ்டேட் நிர்வாகங்கள் அனுமதிக்கக்கூடாது.

வனத்துறை எச்சரிக்கையை மீறி, அனுமதி வழங்கினால் சம்பந்தப்பட்ட எஸ்டேட் நிர்வாகத்தின் மீது, வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, கூறினர்.


ரேஷன் ஊழியர்கள் கிலி



வால்பாறை தாலுகாவில் மொத்தம், 48 ரேஷன் கடைகள் உள்ளன. பெரும்பாலான கடைகள் எஸ்டேட்களில் இருப்பதால், அங்கு வரும் யானைகள் ரேஷன் கடையை இடித்து, அரிசி, பருப்பை சேதப்படுத்துகின்றன. சத்துணவு மையங்களையும் இடித்து சேதப்படுத்துகின்றன. ரேஷன் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதனால், நாள்தோறும் சத்துணவு பொருட்கள் வீணாகிறது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், எஸ்டேட் பகுதியில் செயல்படும் ரேஷன் கடைகளை பில்லர் வைத்து உயரமான இடத்தில்கட்ட வேண்டும் என்பது, மக்களின், 20 ஆண்டுகால எதிர்பார்ப்பாக உள்ளது.


ஒற்றை யானை



வால்பாறை ரோட்டில், ஆழியாறு செக்போஸ்ட் அருகில், ஒற்றை யானை உலா வருகிறது. உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக ஆழியாறு அணைக்கு வந்த யானை, இப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளது.

ஆழியாறு வனத்துறையினர் கூறுகையில், 'குட்டிகளுடன், கூட்டமாக வரும் யானைகள், உடனுக்குடன் இடம் பெயர்ந்து விடுகின்றன. ஆனால், ஒற்றை யானை ஆழியாறு செக்போஸ்ட் சுற்றுப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளது.

இதனால், வால்பாறை ரோட்டில், கவனமாக செல்ல வேண்டும், வழித்தடத்தில் எங்கும் நிற்க வேண்டாம். தனித்தனி வாகனமாக செல்லாமல், ஒன்று சேர்ந்து செல்ல வேண்டுமென, அறிவுறுத்தி வருகிறோம்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-நவ-202211:10:04 IST Report Abuse
அப்புசாமி யார் ஆக்கிரமிப்பாளர்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X