திருட்டை தடுத்ததால் வெறி முதியவர் அடித்துக் கொலை

Added : நவ 25, 2022 | |
Advertisement
வீரபாண்டி:'டீ மாஸ்டர்' திருட முயன்ற போது, அதை தடுத்ததில் ஏற்பட்ட தகராறில், 'தாபா' ஹோட்டல் உரிமையாளரின் தந்தை கொலை செய்யப்பட்டார். டீ மாஸ்டரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.சேலம், உடையாப்பட்டி, கந்தாஸ்ரமம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி, 60. இவரது மகன் நாகராஜன், 31; கொண்டலாம்பட்டி அருகே, 'தாபா' ஹோட்டல் நடத்துகிறார். அங்கு கோவை, காரமடையைச் சேர்ந்த ஜோசப், 44, 'டீ'

வீரபாண்டி:'டீ மாஸ்டர்' திருட முயன்ற போது, அதை தடுத்ததில் ஏற்பட்ட தகராறில், 'தாபா' ஹோட்டல் உரிமையாளரின் தந்தை கொலை செய்யப்பட்டார். டீ மாஸ்டரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சேலம், உடையாப்பட்டி, கந்தாஸ்ரமம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி, 60. இவரது மகன் நாகராஜன், 31; கொண்டலாம்பட்டி அருகே, 'தாபா' ஹோட்டல் நடத்துகிறார். அங்கு கோவை, காரமடையைச் சேர்ந்த ஜோசப், 44, 'டீ' மாஸ்டராக பணிபுரிந்தார்.

நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு நாகராஜன், தன் தந்தையை தாபாவில் படுத்துக்கொள்ள அறிவுறுத்தி வீட்டுக்கு சென்றார்.

இரவு, 11:00 மணிக்கு, நாகராஜனின் பெரியப்பா மாதேஸ்வரனின் மகன் ராஜாவுக்கு போன் செய்த டீ மாஸ்டர் ஜோசப், 'கந்தசாமி யாருடனோ தகராறில் ஈடுபட்டுள்ளார்; உடனே வாருங்கள்' எனக்கூறி, அழைப்பை துண்டித்து உள்ளார்.

உடனே, ராஜா மற்றும் நாகராஜன் வந்து கந்தசாமியை தேடியபோது, அருகில் உள்ள மரத்தடியில் தலை, கழுத்து பகுதிகளில் படுகாயங்களுடன் இறந்து கிடந்தார்; போன் செய்த ஜோசப்பை காணவில்லை.

இதுகுறித்து, நாகராஜன் அளித்த தகவல் படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்தனர். ஜோசப்பின் மொபைல் போனை கண்காணித்தபோது, அரியானுாரில் அவர் இருந்தது தெரிந்தது. உடனே அவரை பிடித்து விசாரித்தனர்.

ஜோசப், பழைய கடையில் சில பொருட்களை திருடி விற்றுள்ளார். அதேபோல், இந்த கடையிலும் மோட்டார், இரும்பு கம்பிகளை திருடிய போது கந்தசாமி தடுத்துள்ளார். இதில், அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது கம்பியால் தாக்கியதில் கந்தசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை ஜோசப் ஒப்புக்கொண்டார். ஜோசப்பை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X