தனுஷ்கோடி மணல் தீடையில் தவித்த இலங்கை அகதிகள் மீட்பு

Added : நவ 25, 2022 | |
Advertisement
ராமேஸ்வரம்:-ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி மணல் தீடையில் தவித்த இலங்கை அகதிகள் 5 பேரை மரைன் போலீசார் மீட்டனர்.இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருள்கள் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைகின்றனர்.இந்நிலையில் இலங்கை மன்னாரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு கள்ளத்தனமாக படகில்
 தனுஷ்கோடி மணல் தீடையில்  தவித்த இலங்கை அகதிகள் மீட்பு

ராமேஸ்வரம்:-ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி மணல் தீடையில் தவித்த இலங்கை அகதிகள் 5 பேரை மரைன் போலீசார் மீட்டனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருள்கள் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைகின்றனர்.

இந்நிலையில் இலங்கை மன்னாரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு கள்ளத்தனமாக படகில் புறப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த கணேஷ் மூர்த்தி 34, இவரது மனைவி ரஜினி 29, மகள்கள் கஜானா 13, டயானா 11, மகன் ஜாய்சன் 5, ஆகியோர் அகதிகளாக தனுஷ்கோடி நோக்கி வந்தனர்.

அப்போது இலங்கை படகோட்டிகள் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் இருந்து 2 கி.மீ.,ல் உள்ள 1ம் மணல் தீடையில் நேற்று அதிகாலை இவர்களை இறக்கி விட்டு இலங்கைக்கு திரும்பி சென்றனர். இவர்கள் 5 பேரையும் மண்டபம் மரைன் எஸ்.ஐ., காளிதாஸ், போலீசார் மீட்டு விசாரித்தனர். இதன் பின் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X