'கொடை'யில் ஆரஞ்சு சீசன் துவக்கம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
கொடைக்கானல்:கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆரஞ்சு சீசன் துவங்கியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாண்டிக்குடி ,அடுக்கம், பாலமலை, சாமகாட்டு பள்ளம் பகுதியில் ஆரஞ்சு பழம் சாகுபடி செய்யப்படுகிறது. நவம்பரில் தொடங்கும் சீசன் ஜனவரியில் நிறைவடையும். நாக்பூர் ஆரஞ்சு மரங்கள் வருகையால் கொடை ஆரஞ்சு எனப்படும் கமலா வகை ஆரஞ்சு தாண்டிக்குடி மலைப்பகுதியில் நோய்
 'கொடை'யில் ஆரஞ்சு சீசன் துவக்கம்

கொடைக்கானல்:கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆரஞ்சு சீசன் துவங்கியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாண்டிக்குடி ,அடுக்கம், பாலமலை, சாமகாட்டு பள்ளம் பகுதியில் ஆரஞ்சு பழம் சாகுபடி செய்யப்படுகிறது. நவம்பரில் தொடங்கும் சீசன் ஜனவரியில் நிறைவடையும். நாக்பூர் ஆரஞ்சு மரங்கள் வருகையால் கொடை ஆரஞ்சு எனப்படும் கமலா வகை ஆரஞ்சு தாண்டிக்குடி மலைப்பகுதியில் நோய் பாதிப்படைந்து அதன் சாகுபடி அழிவின் விளிம்பிற்கு சென்று விட்டது.

அடுக்கம்பகுதியில் மட்டும் அதிக விளைச்சல் உள்ளது. தற்போது பறிக்கப்படும் பழங்கள் மதுரை, திருச்சிக்கு அனுப்பப்படுகிறது. கொடைக்கானல் - வத்தலக்குண்டு ரோட்டில் விவசாயிகள் கிலோ ரூ. 80 க்கு விற்பனை செய்கின்றனர். சுவை மிகுந்த கொடை ஆரஞ்சை சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X