மாநில வாலிபால் போட்டியில் சிறுமியர் சிறந்த விளையாட்டு

Added : நவ 25, 2022 | |
Advertisement
கோவை:சிறுமியருக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டி, நேற்று நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் துவங்கியது.கோவை மாவட்ட வாலிபால் கழகம், டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல்கலாம் நினைவு விளையாட்டு குழு மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல்கலாம் அறக்கட்டளை இணைந்து நடத்தும், 14 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டி, நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள
 மாநில வாலிபால் போட்டியில்   சிறுமியர் சிறந்த விளையாட்டு

கோவை:சிறுமியருக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டி, நேற்று நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் துவங்கியது.

கோவை மாவட்ட வாலிபால் கழகம், டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல்கலாம் நினைவு விளையாட்டு குழு மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல்கலாம் அறக்கட்டளை இணைந்து நடத்தும், 14 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டி, நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நேற்று துவங்கியது.

இந்த இரண்டு நாள் போட்டியில், கோவை, திருப்பூர், சேலம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 38 அணிகள் நாக் அவுட் மற்றும் லீக் முறையில் போட்டியிடுகின்றன.

நேற்று நடந்த நாக் அவுட் சுற்று முடிவுகள்:

14 வயது பிரிவு: சேலம் பாரதியார் அணி, 2 - 0 என்ற செட் கணக்கில் விவேகம் மெட்ரிக் பள்ளி அணியையும், செயின்ட் ஜோசப் பள்ளி அணி, 2 -0 என்ற செட் கணக்கில் சுகுணா பிப்ஸ் அணியையும் வீழ்த்தின.

19 வயது பிரிவு: கே.சி.கே., அணி, 2 - 0 என்ற செட் கணக்கில் பி.எஸ்.ஜி., கிருஷ்ணம்மாள் அணியையும், சென்னை எஸ்.டி.ஏ.டி., அணி, 2 - 0 என்ற செட் கணக்கில், பாரதி மெட்ரிக் அணியையும், ஈரோடு எஸ்.டி.ஏ.டி., அணி 2 - 0 என்ற செட் கணக்கில் வெங்கடலட்சுமி மெட்ரிக் அணியையும், கன்யா குருகுலம் அணி, 2 - 0 என்ற செட் கணக்கில் பிரசன்டேஷன் பள்ளி அணியையும் வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X