பாலியல் தொல்லை வளர்ப்பு தந்தைக்கு ஆயுள்

Added : நவ 25, 2022 | |
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகரை சேர்ந்தவர் மகேந்திரனுக்கு 54, திருமணமாகி குழந்தை இல்லாததால் பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்தார். மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் 11 வயதான அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மகேந்திரனின் உறவினரும், சிறுமிக்கு சகோதரர் உறவுமுறை கொண்ட காமராஜ்பெருமாளும் 25, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்.2020ல் சிறுமிக்கு உடல்நலக்குறைவு

ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகரை சேர்ந்தவர் மகேந்திரனுக்கு 54, திருமணமாகி குழந்தை இல்லாததால் பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்தார்.


மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் 11 வயதான அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மகேந்திரனின் உறவினரும், சிறுமிக்கு சகோதரர் உறவுமுறை கொண்ட காமராஜ்பெருமாளும் 25, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்.


2020ல் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் தொல்லைக்குள்ளானது தெரிந்தது. சிறுமியிடம் நடத்திய விசாரணையில் மகேந்திரனும், காமராஜ் பெருமாளும் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. அவர்களை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கில் மகேந்திரன், காமராஜ் பெருமாளுக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.ஒரு லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்தும், சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தும், நீதிபதி பூரண ஜெய் ஆனந்த் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கலா ஆஜரானார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X