1,330 திருக்குறளும் மனப்பாடமாக தெரியுமா? போட்டியில் நிரூபிக்க மாணவ, மாணவியருக்கு அழைப்பு

Added : நவ 25, 2022 | |
Advertisement
கோவை:திருக்குறளில் உள்ள, 1,330 குறளையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறனுள்ள பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.10 ஆயிரம் பரிசு தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. 2022-23ம் ஆண்டுக்கான போட்டியில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், திருக்குறளின்

கோவை:திருக்குறளில் உள்ள, 1,330 குறளையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறனுள்ள பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.10 ஆயிரம் பரிசு தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. 2022-23ம் ஆண்டுக்கான போட்டியில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்பு பெயர்கள், உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால், கூடுதல் தகுதியாக கருதப்படும்.

முற்றோதல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறிக்குழு முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பரிசுக்குரியவர் பட்டியல், சென்னை தமிழ் வளர்ச்சி துறை இயக்குனருக்கு பரிந்துரைக்கப்படும். ஏற்கனவே பங்கேற்று பரிசு பெற்றவர்கள் கலந்து கொள்ள முடியாது.

முற்றோதலுக்கான விண்ணப்பங்களை, கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரில் பெறலாம் அல்லது, www.tamilvalarchithurai.com என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

கூடுதல் விவரங்களுக்கு, 0422 - 2300 718, 98405 90165 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, டிச.,15க்குள், தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் அலுவலகம், கலெக்டர் அலுவலக பழைய கட்டடத்தின் முதல் தளம், கோவை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும், என, தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X