பெங்களூரில் குளிர், மழை 27 வரை நீடிக்கும் பெங்களூரு மக்களை வாட்டும் குளிர், மழை 27 வரை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

Added : நவ 25, 2022 | |
Advertisement
பெங்களூரு-கர்நாடகாவின் மலைப்பகுதி மற்றும் கடலோர பகுதிகளில், மழைக் காலத்தில் என்ன சூழ்நிலை இருக்குமோ, அதே சூழ்நிலை, வானிலை பெங்களூரில் நிலவுகிறது.பெங்களூரில், இரண்டு வாரமாக குளிர் மிக அதிகமாக உள்ளது. இதற்கு முன் காலை, இரவில் மட்டும் குளிர் இருந்தது. பகல் நேரத்தில் வெயில் வாட்டியது. தற்போது பகல் வேளையிலும், குளிர்ச்சி தன்மை தென்படுகிறது.மலைப்பகுதி மற்றும் கடலோர



பெங்களூரு-கர்நாடகாவின் மலைப்பகுதி மற்றும் கடலோர பகுதிகளில், மழைக் காலத்தில் என்ன சூழ்நிலை இருக்குமோ, அதே சூழ்நிலை, வானிலை பெங்களூரில் நிலவுகிறது.

பெங்களூரில், இரண்டு வாரமாக குளிர் மிக அதிகமாக உள்ளது. இதற்கு முன் காலை, இரவில் மட்டும் குளிர் இருந்தது. பகல் நேரத்தில் வெயில் வாட்டியது. தற்போது பகல் வேளையிலும், குளிர்ச்சி தன்மை தென்படுகிறது.

மலைப்பகுதி மற்றும் கடலோர பகுதிகளில், மழைக்காலத்தில் என்ன சூழ்நிலை இருக்குமோ, அதே சூழ்நிலை, வானிலை பெங்களூரில் தென்படுகிறது. பெங்களூரு மட்டுமின்றி, கர்நாடகாவின், பெரும்பாலான மாவட்டங்களிலும் குளிர் வாட்டி வதைக்கிறது.

இதற்கிடையில் பெங்களூரில், சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலையில் இருந்தே, லேசான மழை பெய்து வருகிறது.

காலை அலுவலகம், தொழிற்சாலை பணிகளுக்கு செல்வோர், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்வோர், மழையை திட்டியபடி குடையுடன் சென்றதை காண முடிந்தது.

பலரும் ஸ்வெட்டர், ரெயின் கோட் அணிந்து வெளியே வருகின்றனர். பனி மூட்டமும் அதிகம் உள்ளது.

வானிலை ஆய்வு மைய வல்லுனர்கள் கூறியதாவது:

கர்நாடகாவின் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், நவம்பர் 27 வரை மழை பெய்யும் அறிகுறிகள் தென்படுகிறது.

உடுப்பி, உத்தரகன்னடா, தட்சிண கன்னடா, பெலகாவி, பாகல்கோட், தார்வாட், கதக், ஹாவேரி, கொப்பால், ராய்ச்சூர், விஜயபுரா, யாத்கிர், பல்லாரி, பெங்களூரு நகர், பெங்களூரு ரூரல், சித்ரதுர்கா, சிக்கபல்லாபூர், சிக்கமகளூரு, ஹாசன், கோலார், மாண்டியா, ராம்நகர், ஷிவமொகா, துமகூரில் மழை பெய்யும்.

அடுத்த 48 மணி நேரத்தில், தெற்கு, வடக்கு மற்றும் கடலோர மாவட்டங்களின், சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பெங்களூரில் மேகமூட்டமான வானிலை இருக்கும். கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

வெப்ப நிலையும் குறைந்துள்ளது. அதிக பட்சம் 26 டிகிரி, குறைந்தபட்சம் 19 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X