அக்கடா/துக்கடா 3

Added : நவ 25, 2022 | |
Advertisement
* மிளகாய் வற்றல் கிலோ 800 ரூபாய்பல்லாரி: இரண்டு ஆண்டுகளாக, பல்லாரி மாவட்டத்தில் பெருமளவில் விவசாயிகள் மிளகாய் பயிரிடுகின்றனர். பொதுவாக மார்க்கெட்டுக்கு வரத்து குறைவாக இருந்தால், விலை அதிகரிப்பது சகஜம். ஆனால் வரத்து அதிகமாக இருந்தும், மிளகாய் கைக்கு எட்டும்படி இல்லை. இதனிடையில், காய்ந்த மிளகாய் விலை, கிலோவுக்கு 800 ரூபாயை எட்டியுள்ளது.இதனால் சில்லரை வியாபாரிகள், வாங்க
 அக்கடா/துக்கடா 3



* மிளகாய் வற்றல் கிலோ 800 ரூபாய்

பல்லாரி: இரண்டு ஆண்டுகளாக, பல்லாரி மாவட்டத்தில் பெருமளவில் விவசாயிகள் மிளகாய் பயிரிடுகின்றனர். பொதுவாக மார்க்கெட்டுக்கு வரத்து குறைவாக இருந்தால், விலை அதிகரிப்பது சகஜம். ஆனால் வரத்து அதிகமாக இருந்தும், மிளகாய் கைக்கு எட்டும்படி இல்லை. இதனிடையில், காய்ந்த மிளகாய் விலை, கிலோவுக்கு 800 ரூபாயை எட்டியுள்ளது.

இதனால் சில்லரை வியாபாரிகள், வாங்க முன் வருவதில்லை. காய்கறி மார்க்கெட்டுகளில், சிலர் மட்டுமே மிளகாய் வற்றல் விற்கின்றனர். தரமான மிளகாய் வற்றல் கிலோவுக்கு 600 ருபாய் முதல் 800 ரூபாய் வரை உள்ளது. சிறிது தரம் குறைந்த மிளகாய் வற்றல் 350 முதல் 400 ரூபாய் வரை உள்ளது. ஏழை, நடுத்தர மக்கள் சமையலுக்கு, மிளகாய் வற்றலுக்கு பதில், பச்சை மிளகாய் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

* பஸ் பாஸ் வழங்குவதில்

என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி.,முதலிடம்

ஹூப்பள்ளி: வடமேற்கு போக்குவரத்து கழகம், ஹூப்பள்ளியில், பதிவு செய்து கொண்ட கட்டட கட்டுமான தொழிலாளர்களுக்கு, 'இலவச பஸ் பாஸ்' வழங்குகிறது. மற்ற போக்குவரத்து கழகங்களுடன் ஒப்பிட்டால், என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி., எனும் வட மேற்கு போக்குவரத்து கழகம், 54 ஆயிரத்து 150 பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கி, முதல் இடத்தில் உள்ளது.

அதற்கடுத்த இடங்களில், கே.எஸ்.ஆர்.டி.சி.,யும், என்.இ.கே.ஆர்.டி.சி., எனும் வடகிழக்கு போக்குவரத்து கழகமும் உள்ளன. இலவச பஸ் பாஸ் வழங்கும் அரசின் திட்டம் தொழிலாளர்களின், பொருளாதார சுமையை குறைக்கிறது.

* பயணியர் உயிருடன் விளையாட்டு

கதக்: கதக் மாவட்டத்தில், 'டப்பா' பஸ்களின் சத்தம் அதிகம் உள்ளது. எங்கு பார்த்தாலும் இத்தகைய பஸ்களே தென்படுகின்றன. சாலைகளில் செல்லும் போதே, பழுதடைந்து நிற்கின்றன. பிரேக் பழுதடைந்து 'பல்டி' அடிக்கின்றன. சில நாட்களுக்கு முன், ஹுயிலகோளா கிராமத்தின் அருகில், பிரேக் ஒயர் அறுந்து, பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஷிரஹட்டியின், ஹோசூர் கிராமம் அருகில் ஒயர் அறுந்து, சாலை ஓரமாக சாய்ந்தது. பயணியர் பலரும் காயமடைந்தனர். அரசு பஸ்களில் ஏறவே பயணியர் அஞ்சுகின்றனர். ஏழை, நடுத்தர மக்கள் அரசு பஸ்களையே நம்பியுள்ளனர். 'அவர்களின் உயிருடன் விளையாடுவது சரியா' என, மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

* யானைகள் தொந்தரவால் மக்கள் அதிருப்தி

உத்தரகன்னடா: காட்டு யானைகளின் தொந்தரவை கட்டுப்படுத்த, செயற்படை அமைத்து, கர்நாடக வனத்துறை உத்தரவு பிறப்பித்தது. சிக்கமகளூரு, ஹாசன், மைசூரு, குடகு மாவட்டங்களுக்கு மட்டுமே, இந்த உத்தரவு பொருந்துகிறது. உத்தரகன்னட மாவட்டத்தை கை விட்டதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தான்டேலி சுற்றுப்பகுதிகளின், அடர்ந்த வனத்தில் இருந்து வெளியே வரும் யானைகள், முன்டகோடா, எல்லாபுரா, ஹளியாலா தாலுகாக்களின் கிராமங்களில் புகுந்து, நெல், கரும்பு, பாக்கு, மக்காச்சோளம் போன்ற விளைச்சல்களை மிதித்து நாசமாக்குகின்றன. எனவே, உத்தரகன்னடாவுக்கும் செயற்படை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

***

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X