நிலுவை செலுத்தி பத்திரம் பெற வீட்டு வசதி வாரியம் அழைப்பு

Added : நவ 25, 2022 | |
Advertisement
கோவை;வீட்டு வசதி வாரியத்தில் மனைப்பிரிவு, வீடு, அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்கள் நிலுவை தொகை செலுத்தி, கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால், கோவையில் பல்வேறு இடங்களில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, விற்கப்பட்டிருக்கின்றன. கணபதி அண்ணா நகர், காளப்பட்டி பேஸ் 2 பிருந்தாவன்

கோவை;வீட்டு வசதி வாரியத்தில் மனைப்பிரிவு, வீடு, அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்கள் நிலுவை தொகை செலுத்தி, கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால், கோவையில் பல்வேறு இடங்களில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, விற்கப்பட்டிருக்கின்றன.

கணபதி அண்ணா நகர், காளப்பட்டி பேஸ் 2 பிருந்தாவன் நகர், நேரு நகர், இளங்கோ நகர், கோவைப்புதுார், குறிச்சி பேஸ்-1, பேஸ்-2, பெரியநாயக்கன்பாளையம், சிங்காநல்லுார், பொன்னையராஜபுரம், டாடாபாத், வெள்ளக்கிணறு, உப்பிலிபாளையம், வீரகேரளம் உட்பட பல்வேறு இடங்களில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கின்றன.

ஒதுக்கீடு பெற்றவர்கள், வாரியத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெறாதவர்கள், வட்டி தள்ளுபடியில் ஒரே தவணையாகவோ அல்லது நிலுவையில் உள்ள அசல் தொகைக்கு, நடைமுறையில் உள்ள தனி வட்டியுடன் மூன்று தவணைகளாகவோ செலுத்தி, கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ளலாம்.

இச்சலுகை, 2023 மே 5ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அதன்பின் காலநீட்டிப்பு செய்யப்பட மாட்டாது என, கோவை கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X