கங்கையில் தமிழ் விளையாடுகிறது காவிரிக்கரையில் தள்ளாடுகிறது

Added : நவ 25, 2022 | |
Advertisement
தேனி:''காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மூலம் கங்கை நதிக்கரையில் தமிழ் விளையாடுகிறது. தமிழகத்தில் காவிரிக்கரையில் தள்ளாடுகிறது,'' என பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் கூறினார்.தேனியில் கட்சியின் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:காங்., ஆட்சிக்காலத்தில்தீவிரவாதிகள் மக்களை விரட்டும் நிலை மாறி தற்போது நாடு தீவிரவாதிகளை
 கங்கையில் தமிழ் விளையாடுகிறது காவிரிக்கரையில் தள்ளாடுகிறது

தேனி:''காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மூலம் கங்கை நதிக்கரையில் தமிழ் விளையாடுகிறது. தமிழகத்தில் காவிரிக்கரையில் தள்ளாடுகிறது,'' என பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் கூறினார்.

தேனியில் கட்சியின் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:

காங்., ஆட்சிக்காலத்தில்தீவிரவாதிகள் மக்களை விரட்டும் நிலை மாறி தற்போது நாடு தீவிரவாதிகளை விரட்டுகிறது. 200 மாவட்டங்களில் நக்சல்கள் பரவியிருந்தனர். அமித்ஷா உள்துறை அமைச்சராக பதவியேற்ற அவர்களின் எல்லைகளை சுருக்கினார்.

தமிழகத்தில் அரசியல்சூழல் பா.ஜ.விற்கு ஆதரவாக உள்ளது. ஓட்டு வங்கி 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. பிரதமரின் தொடர் வருகையால் இங்கு அரசியல் களம் மாறியுள்ளது. தி.மு.க.,வை எதிர்க்கும் கூட்டணியில் இருப்பேன் என்று தினகரன் கூறியதை வரவேற்கிறேன். தி.மு.க., அரசியலில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே எங்கள் ஆசை.

கங்கைக்கரையில் தமிழ் விளையாடுகிறது. காவிரி கரையில் தமிழ் தள்ளாடுகிறது. காசி தமிழ் சங்கமம் மூலம் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் மதுவிலக்கு 1972 வரை இருந்தது. காமராஜர் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்த போது குடிக்க வைத்தவர் கருணாநிதி. தமிழர்களை மது குடிக்க பழக்கி ஐம்பது ஆண்டுகள் ஆனதற்கு தி.மு.க., பொன்விழா கொண்டாடலாம். மது அருந்துவது இன்று கலாச்சாரமாக மாறி வருகிறது. தமிழகத்தில் 2026 ல் பா.ஜ., ஆட்சி அமையும், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X