உண்டியல் எண்ணிக்கை பாதுகாப்பு பழநியில் கருவி வைத்து சோதனை

Added : நவ 25, 2022 | |
Advertisement
பழநி:பழநி மலைக்கோயிலில் உண்டியல் எண்ணும்பகுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் நடமாட்டத்தை தடுக்க புதிய கருவி வைத்து சோதனை நடந்தது.இக்கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கல்லுாரி மாணவர்கள்,வங்கி ஊழியர்கள், கோயில் ஊழியர்கள் ஈடுபடுவர். கோயில் அறங்காவலர்கள், அதிகாரிகளும் பங்கேற்பர். அப்பகுதி முழுவதும் கேமராவால்
 உண்டியல் எண்ணிக்கை பாதுகாப்பு பழநியில் கருவி வைத்து சோதனை

பழநி:பழநி மலைக்கோயிலில் உண்டியல் எண்ணும்பகுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் நடமாட்டத்தை தடுக்க புதிய கருவி வைத்து சோதனை நடந்தது.

இக்கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கல்லுாரி மாணவர்கள்,வங்கி ஊழியர்கள், கோயில் ஊழியர்கள் ஈடுபடுவர். கோயில் அறங்காவலர்கள், அதிகாரிகளும் பங்கேற்பர். அப்பகுதி முழுவதும் கேமராவால் கண்காணிக்கப்படும். கோடிக்கணக்கான ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைக்கிறது.

இந்நிலையில் இக்கோயிலில் உண்டியல் எண்ணிக்கையில் பங்குபெறும் நபர்களை கண்டறியவும்,அனுமதிக்கப்படாத நபர்கள் அப்பகுதியில் நுழைவதை தடுக்கவும், புதிய கருவி மூலம் நேற்று சோதனை நடத்தப்பட்டது.

இக்கருவி அங்கு அனுமதிக்கப்பட்ட நபர்களை மட்டும் அப்பகுதிக்குள் உள் நுழையவும், வெளியேறவும் அடையாளம் காணும் வகையில் முக பதிவுகள் செய்யப்பட்டு பரிசோதனை நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X