உரம் இருப்பு உள்ளது; கலெக்டர் 'பளிச்'

Added : நவ 25, 2022 | |
Advertisement
திருப்பூர்:நெல் சாகுபடிக்கு தேவையான அளவு உரம் இருப்பு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டர் வினீத் பேசியதாவது:திருப்பூர் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு, 618.20 மி.மீ., நடப்பாண்டு, இம்மாதம் முடிய, சராசரியாக, 120 மி.மீ., மழை பெய்யவேண்டும். இந்நிலையில் இதுவரை, 813.25 மி.மீ., மழை பெய்துள்ளது.இது

திருப்பூர்:நெல் சாகுபடிக்கு தேவையான அளவு உரம் இருப்பு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டர் வினீத் பேசியதாவது:

திருப்பூர் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு, 618.20 மி.மீ., நடப்பாண்டு, இம்மாதம் முடிய, சராசரியாக, 120 மி.மீ., மழை பெய்யவேண்டும். இந்நிலையில் இதுவரை, 813.25 மி.மீ., மழை பெய்துள்ளது.

இது சராசரி மழை அளவை விட, 195.05 மி.மீ., அதிகம்.நெல், 27.53 டன்; சிறு தானிய பயிறு 12.68 டன்; பயிறுவகை பயிறுகள் 38.50 டன்; எண்ணெய் வித்து பயிர் விதைகள் 22.74 டன் என, மாவட்டத்தில் போதிய அளவு விதைகள் இருப்பு உள்ளது.

அமராவதியிலிருந்து நீர் வரத்து துவங்கியுள்ளதால், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் விவசாயிகள் நெல் சாகுபடிக்கு நிலங்களை தயார் செய்துவருகின்றனர்.

கீழ்பவானி பகுதிகளான காங்கயம், வெள்ளகோவிலில் நெல் சாகுபடி சம்பா பருவத்தில் துவங்க உள்ளது.

நெல் சாகுபடிக்கு தேவையான அளவு உரங்கள் இருப்பு உள்ளது. யூரியா 2,010 டன்; டி.ஏ.பி., 875 டன்; காப்ளக்ஸ் 4,254 டன்; சூப்பர் பாஸ்பேட் 540 டன் இருப்பு உள்ளது.

இவ்வாறு, அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X