காங்., எம்.எல்.ஏ.,டிராக்டர் மோதி சிறுவன் பலி

Added : நவ 25, 2022 | |
Advertisement
தென்காசி:தென்காசி அருகே சுரண்டையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வின் டிராக்டர் மோதி 4 வயது சிறுவன்பலியானான். சிறுவன் குடும்பத்தினர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.தென்காசி தொகுதி காங்., எம்.எல்.ஏ., பழனி நாடார் சேம்பர் செங்கல்சூளைகள் நடத்துகிறார். அதற்கு சரளை மண் ஏற்றி வந்த அவரது நிறுவன டிராக்டர் கீழச்சுரண்டை பிள்ளையார் கோயில் தெருவில் சென்றது. அப்போது ராஜதுரை மகன் ராஜமுகன்
 காங்., எம்.எல்.ஏ.,டிராக்டர் மோதி சிறுவன் பலி

தென்காசி:தென்காசி அருகே சுரண்டையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வின் டிராக்டர் மோதி 4 வயது சிறுவன்பலியானான். சிறுவன் குடும்பத்தினர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.

தென்காசி தொகுதி காங்., எம்.எல்.ஏ., பழனி நாடார் சேம்பர் செங்கல்சூளைகள் நடத்துகிறார். அதற்கு சரளை மண் ஏற்றி வந்த அவரது நிறுவன டிராக்டர் கீழச்சுரண்டை பிள்ளையார் கோயில் தெருவில் சென்றது. அப்போது ராஜதுரை மகன் ராஜமுகன் டிராக்டரின் முன்சக்கரத்தில் சிக்கி பலியானான். நடவடிக்கை கோரி ராஜதுரை குடும்பத்தினர் சுரண்டை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.

எம்.எல்.ஏ., பழனி நாடார், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் பேசி நிவாரண நிதியாக ரூ. 6 லட்சம் வழங்கினார். இறுதிச் சடங்குகளிலும் பங்கேற்றார். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. டிராக்டர் டிரைவர் பகவதிராஜனை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X