'தாட்கோ' திட்டத்தில், ஆவின் பாலகம் தொழில் முனைவோருக்கு அழைப்பு

Added : நவ 25, 2022 | |
Advertisement
திருப்பூர்:'தாட்கோ' திட்டத்தில், மானியத்துடன் ஆவின் பாலகம் அமைக்க தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.'தாட்கோ' திட்டம் மூலம், நடப்பு 2022 - 23 நிதியாண்டில், 50 தொழில்முனைவோருக்கு, 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆவின் பாலகம் அமைக்க, 45 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்ட பயனாளிகள், 18 முதல் 65 வயதுக்கு உட்பட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தவராக

திருப்பூர்:'தாட்கோ' திட்டத்தில், மானியத்துடன் ஆவின் பாலகம் அமைக்க தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

'தாட்கோ' திட்டம் மூலம், நடப்பு 2022 - 23 நிதியாண்டில், 50 தொழில்முனைவோருக்கு, 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆவின் பாலகம் அமைக்க, 45 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்ட பயனாளிகள், 18 முதல் 65 வயதுக்கு உட்பட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தவராக இருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தில் இதுவரை மானியம் ஏதும் பெற்றிருக்க கூடாது. ஆதி திராவிடர் தனி நபருக்கு, திட்ட தொகையில், 30 சதவீதம் அல்லது அதிகபட்சம், 2.25 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

பழங்குடியினர் தனி நபருக்கு, திட்ட தொகையில், 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 3.75 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும். www.application.tahdco.com என்கிற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை பெறலாம்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், 5வது தளத்தில் இயங்கும் 'தாட்கோ' அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். விவரங்களுக்கு, 94450 29552, 0421 2971112 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X