'கிளினிக்' சீல்; அதிகாரிகள் நடவடிக்கை

Added : நவ 25, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூரில், போலி ஆவணங்கள் மூலமாக நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த, கிளினிக்குக்கு மருத்துவ துறையினர் 'சீல்' வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, கொடிகம்பத்தில் செயல்பட்டு வரும் 'ஹரிணி கிளினிக்' குறித்து கலெக்டருக்கு புகார் சென்றது. இதனால், மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் கனகராணி, தேசிய சுகாதார திட்ட மாவட்ட

திருப்பூர்:திருப்பூரில், போலி ஆவணங்கள் மூலமாக நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த, கிளினிக்குக்கு மருத்துவ துறையினர் 'சீல்' வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, கொடிகம்பத்தில் செயல்பட்டு வரும் 'ஹரிணி கிளினிக்' குறித்து கலெக்டருக்கு புகார் சென்றது. இதனால், மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் கனகராணி, தேசிய சுகாதார திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமையில் கடந்த 19ம் தேதிஆய்வு மேற்கொண்டு விசாரித்தனர்.

அதில் போலி ஆவணங்கள் வாயிலாக அனுமதி பெற்று, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது. தொடர்ந்து, கிளினிக்குக்கு பூட்டு போட்டு முதல் கட்டமாக நடவடிக்கை எடுத்தனர். இச்சூழலில், முறைகேடாக செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்த நிலையில், நேற்று மாலை மருத்துவத்துறை இணை இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள் பூட்டப்பட்ட கிளினிக்குக்கு 'சீல்' வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X