புல்லுக்காடு குடியிருப்பில் சுவர் ஓவியம் அட்டகாசம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
கோவை:உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரிய குடியிருப்புகளில் வரையப்பட்டுள்ள, சுவர் ஓவியங்கள் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.ஸ்டார்ட் இந்தியா பவுண்டேசன் மற்றும் ஏசியன் பெயின்ட்ஸ் மற்றும் மாநகராட்சி சார்பில், உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் 2020ம் ஆண்டு முதல், சுவர்
 புல்லுக்காடு குடியிருப்பில்  சுவர் ஓவியம் அட்டகாசம்

கோவை:உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரிய குடியிருப்புகளில் வரையப்பட்டுள்ள, சுவர் ஓவியங்கள் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.

ஸ்டார்ட் இந்தியா பவுண்டேசன் மற்றும் ஏசியன் பெயின்ட்ஸ் மற்றும் மாநகராட்சி சார்பில், உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் 2020ம் ஆண்டு முதல், சுவர் ஓவியங்கள் வரையப்படுகின்றன.

நேற்று, புதிதாக மூன்று இடங்களில் வரையப்பட்ட சுவர் ஓவியங்களை பார்வையிட்ட, மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர், வரைந்தவர்களை அழைத்து பாராட்டினர்.

இதுகுறித்து, ஸ்டார்ட் இந்தியா பவுண்டேசன் சிறப்பு திட்டங்களின் இயக்குனர் விகாஸ் நாகராரே கூறுகையில், ''2020ல் இங்கு நான்கு ஓவியங்கள், 2021ல் ஐந்து ஓவியங்கள் சுவர்களில் வரையப்பட்டன. தற்போது, மூன்று ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இன்னும் நான்கு ஆண்டுகள் இப்பகுதியில் ஓவியம் வரைய, மாநகராட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X