அதிகாரிகள் ஆய்வில் கன்னியாகுமரி கடைசி இடம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
'அதிகாரிகள் ஆய்வில் கன்னியாகுமரி மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. 13 மாவட்டங்கள்தொடர்ந்து பின் தங்கிய நிலையில் உள்ளன. ஒவ்வொரு மாவட்டமும் தங்கள் நிலையை உயர்த்த வேண்டும்' என தலைமை செயலர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.அனைத்து மாவட்டங்களிலும் துறை அலுவலர்கள் நடத்தும் ஆய்வுகள் குறித்த விபரங்களை ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்கு முன்பாக

'அதிகாரிகள் ஆய்வில் கன்னியாகுமரி மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. 13 மாவட்டங்கள்தொடர்ந்து பின் தங்கிய நிலையில் உள்ளன. ஒவ்வொரு மாவட்டமும் தங்கள் நிலையை உயர்த்த வேண்டும்' என தலைமை செயலர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும் துறை அலுவலர்கள் நடத்தும் ஆய்வுகள் குறித்த விபரங்களை ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்கு முன்பாக அரசுக்கு அனுப்ப தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஒவ்வொரு மாதமும் தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் எந்த மாவட்டம் சிறப்பாக உள்ளது எந்த மாவட்டம் பின் தங்கி உள்ளது என்ற விபரத்துடன் ஒவ்வொரு மாவட்டமும் வரும் மாதங்களில் தங்கள் நிலையை உயர்த்த வேண்டும் என அனைத்து கலெக்டர்களுக்கும் தலைமை செயலர் கடிதம் எழுதி உள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

அரசு திட்டப் பணிகள் மற்றும் செயல்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்வது ஒவ்வொரு மாதமும் அதிகரித்தபடி உள்ளது. மாநில அளவிலான ஆய்வுகள் எண்ணிக்கை ஆகஸ்டில் 141 செப்டம்பரில் 180 ஆக இருந்தது. கடந்த மாதம் 195 ஆக அதிகரித்துள்ளது.

ஆய்வு எண்ணிக்கை அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இங்கு 451 ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அடுத்த இடங்களில் சிவகங்கை, செங்கல்பட்டு, திருச்சி மாவட்டங்கள் உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகக் குறைவாக 71 ஆய்வுகள் நடத்தப்பட்டு கடைசி இடத்தில் உள்ளது.

செப்டம்பர் மாத சராசரி ஆய்வு 180ஐ விட 22 மாவட்டங்களில் ஆய்வுகள் குறைவாக உள்ளன. கன்னியாகுமரி, கடலுார், தேனி, திருப்பத்துார், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம். திருநெல்வேலி, சேலம், நாமக்கல், கோவை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் தொடர்ந்து மாநில சராசரியை விட பின் தங்கி உள்ளன.

மக்களை தேடி மருத்துவத் திட்டம் தொடர்பாக 10 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை.

நான்கு மாத அறிக்கையின்படி மோசமான செயல்பாடு உள்ள மாவட்டங்களாக மயிலாடுதுறை, நாமக்கல், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, திருவாரூர், வேலுார் உள்ளன.

அலுவலர்களை பொறுத்தவரை 20 மாவட்ட வருவாய் அலுவலர்கள் 25 மாவட்ட திட்ட அலுவலர்கள் 20 மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்கள் 25 தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர்கள் 17 மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குனர்கள்18 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாநில சராசரியை விடக் குறைவான ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர்.

தென்காசி, கன்னியாகுமரி சமூக நல அலுவலர்கள் ஒரு ஆய்வு கூட மேற்கொள்ளவில்லை. ராமநாதபுரம், திருவாரூர், கன்னியாகுமரியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் ஒரு ஆய்வுக்குக் கூட செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X