எஸ்.ஆர்.சி., மில் பாலம் கட்டுமான பணி மீண்டும் துவக்கம்! நிறைவுக்கு வரும், 14 ஆண்டு 'வனவாசம்'

Updated : நவ 25, 2022 | Added : நவ 25, 2022 | |
Advertisement
திருப்பூர்:ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி மீண்டும் துவங்கியுள்ளது. 2023 ஏப்., மாதம் பாலம் திறக்கப்படுமென, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி.,மில் பகுதியில் இருந்து கொங்கு மெயின் ரோடு, கட்டபொம்மன்நகர், கொடிக்கம்பம் பகுதியை இணைக்க உயர்மட்ட பாலம் கட்டும் பணி பத்தாண்டுக்கு முன் துவங்கியது. நிலம்
Geo textiles, SRC Mill Bridge, Tirupur, எஸ்ஆர்சி மில் பாலம், திருப்பூர், நெடுஞ்சாலைத்துறை, சென்னை ஐஐடி, ஜியோ டெக்டைல்ஸ், Highways Department, IIT Chennai,

திருப்பூர்:ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி மீண்டும் துவங்கியுள்ளது. 2023 ஏப்., மாதம் பாலம் திறக்கப்படுமென, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி.,மில் பகுதியில் இருந்து கொங்கு மெயின் ரோடு, கட்டபொம்மன்நகர், கொடிக்கம்பம் பகுதியை இணைக்க உயர்மட்ட பாலம் கட்டும் பணி பத்தாண்டுக்கு முன் துவங்கியது. நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல், நிதிஒதுக்கீடு தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாக பாலம் கட்டுமான பணி ஜவ்வாக இழுக்கிறது.

தெற்கு பகுதியில் பணிகள் நிறைவுற்ற நிலையில், வடக்கு பகுதியில் பாலத்தை இறக்கி, சூர்யா காலனி சாலையுடன் இணைக்க முடியாத நிலை உள்ளது. வடக்கு பகுதியில் பாலம் நிறைவு பெறும் இடம் பாறைக்குழி (தற்போது மண் போட்டு மூடப்பட்டுள்ளது) என்பதால், மண்ணின் தரத்தை ஆராயாமல், 'பில்லர்' கட்ட முடியாது, என பாதுகாப்பு குழுவினர் தடை விதித்திருந்தனர்.

நெடுஞ்சாலைத்துறையினர் பல கட்ட முயற்சிகள் மேற்கொண்ட போதும், மழை பெய்யும் போது மழைநீர் தேங்கி நிற்பதும், தேங்கிய நீரை லாரிகள் கொண்டு வெளியேற்ற பின் மீண்டும் மழை பெய்து தண்ணீர் தேங்குவதும் வாடிக்கையாக இருந்து வந்தது.


ஐ.ஐ.டி., குழு உதவிஇதற்காக, சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் உதவி நாடப்பட்டது. ஆறு பேர் அடங்கிய குழுவினர் கடந்த வாரம் எஸ்.ஆர்.சி., மில் பாலம், பணி நடக்காமல் இழுபறியாக உள்ள பகுதி, பாறைக்குழி, மண்ணின் தரம், ஆழப்படுத்தி பில்லர் அமைத்தால் தாங்கும் திறன் குறித்து விரிவாக ஆய்வு நடத்தினர்.

ஆய்வு பணி முடிந்த நிலையில், தேங்கிய தண்ணீரை முழுமையாக வெளியேற்றி விட்டு, நடப்பு வாரம் மீண்டும் பாலம் பணி துவங்கியுள்ளது.

இது குறித்து, கிராம சாலைகள் திட்ட, உதவி கோட்ட பொறியாளர் ரத்தினசாமி கூறியதாவது:

தொடர்ந்து மழைநீர் தேங்கி வந்ததால், மண்ணின் ஸ்திரத்தன்மை உறுதி செய்த பின் மீண்டும் பணி துவங்கியுள்ளது. ஐ.ஐ.டி., குழுவினர் 'ஜியோ டெக்டைல்ஸ்' எனும் மாதிரி திட்டத்தை பயன்படுத்தி பணிகளை துவங்க வழிகாட்டுதல் வழங்கியுள்ளனர்.

அதன்படி குறிப்பிட்ட உயரத்துக்கு ஒருமுறை 'ஜியோகிரீட்' எனும் நீர் உறிஞ்சும் மேட் போன்ற கவர்கள் நிலத்தில் முழுதுமாக பரப்பி நிரப்பப்படும். அதன் மேல் மண் கொட்டி தளம் உயர்த்தப்படும். அவற்றில் நீர் தேங்காது; அதனை உறுதி செய்த பின், சீரான இடைவெளியில் கான்கீரிட், பில்லர் நிலைநிறுத்தும் பணி துவங்கும்.

தொடர் மழை பெய்தாலும், மழைநீர் பாலத்தின் கீழ் தேங்காத வகையில், பாலத்துக்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஐ.ஐ.டி., குழு வழிகாட்டுதல்களை பின்பற்றி, புதிய முறையில் பாலம் பணி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. 2023 மார்ச் முதல் வாரத்துக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, ஏப்., மாதம் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X