மேல்மலையனுார் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்ஸவம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
செஞ்சி:விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்ஸவம் நடந்தது.அன்று காலை 4:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவச அலங்காரம், விசேஷ அர்ச்சனை நடந்தது. இரவு 11:00 மணிக்கு காய், கனிகளால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சல் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் எழுந்தருளினார்.அப்போது
 மேல்மலையனுார் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்ஸவம்

செஞ்சி:விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்ஸவம் நடந்தது.

அன்று காலை 4:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவச அலங்காரம், விசேஷ அர்ச்சனை நடந்தது. இரவு 11:00 மணிக்கு காய், கனிகளால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சல் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் எழுந்தருளினார்.

அப்போது கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் கற்பூர தீபமேற்றி, அம்மனை வழிபட்டனர்.

தொடர்ந்து பூசாரிகளும், பக்தர்களும் தாலாட்டு பாடல்களைப் பாடினர்.

பூஜையில், வடக்கு மண்டல ஐ.ஜி., கண்ணன், எஸ்.பி., ஸ்ரீநாதா, சப் கலெக்டர் கட்டா ரவிதேஜா, ஹிந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம் மற்றும் அறங்காவலர்கள் பங்கேற்றனர்.

மழையையும் பொருட்படுத்தாமல் வெளியூரில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


கூடுதல் மண்டபம் தேவை



ஊஞ்சல் உற்ஸவத்தையொட்டி சுவாமி தரிசனம் செய்ய சென்னை. வேலுார், சிதம்பரம், கடலுார், சேலம் என வெகு தொலைவில் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்திருந்தனர்.

மழையின் போது இவர்கள் தங்குவதற்கு இங்கு போதிய மண்டபம் இல்லை. இதனால் குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மழை காலத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு கூடுதல் மண்டபங்களைக் கட்ட ஹிந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X