கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி... இருட்டில் கொஞ்சவா 'ஸ்மார்ட் சிட்டி?' வாலாங்குளக்கரைக்கு தேவை அக்கறை!

Updated : நவ 25, 2022 | Added : நவ 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
கோவை:வாலாங்குளக்கரையோரம் மாலை மற்றும் இரவில், முகம் சுளிக்க வைக்கும் செயல்களில் ஈடுபடும் காதல் ஜோடிகளால், அங்கு பொதுமக்கள் நடைபயிற்சி செல்வது அடியோடு நின்று விட்டது. அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நோக்கமே, இதனால் சிதைந்து போயுள்ளது. மாநகராட்சி கமிஷனர் உடனடியாக, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.'ஸ்மார்ட் சிட்டி'
Smart City, Coimbatore, Walangulakarai, ஸ்மார்ட் சிட்டி, கோவை, மாநகராட்சி , வாலாங்குளக்கரை,  Corporation,

கோவை:வாலாங்குளக்கரையோரம் மாலை மற்றும் இரவில், முகம் சுளிக்க வைக்கும் செயல்களில் ஈடுபடும் காதல் ஜோடிகளால், அங்கு பொதுமக்கள் நடைபயிற்சி செல்வது அடியோடு நின்று விட்டது. அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நோக்கமே, இதனால் சிதைந்து போயுள்ளது. மாநகராட்சி கமிஷனர் உடனடியாக, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், மாநகராட்சி வசம் இருக்கும் குளங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கோவை மக்களுக்கு பொழுது போக்கு அம்சங்களை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசிடம் இருந்து, 490 கோடி ரூபாயும், மாநில அரசிடம் இருந்து, 500 கோடி ரூபாயும் பெறப்பட்டு இப்பணிகள் நடக்கின்றன.

குளக்கரைகளில் நடைபாதை, குழந்தைகள் விளையாட்டு பூங்கா உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறுகின்றன. வாலாங்குளத்தில், ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடக்கும் நிலையில், குளத்தின் அழகை ரசிக்க 'புளோட்டிங் ஜெட்டி' எனும் மிதக்கும் மேடை, உணவுக்கூடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


'வாக்கிங்' சென்றால் 'அய்யே'



வாலாங்குளத்தின் கிழக்கே, பை-பாஸ் ரோட்டை ஒட்டிய கரையில் ஓய்வெடுக்கும் பகுதி, குளக்கரையை அமர்ந்து ரசிக்கும் பகுதி போன்ற அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கரையானது, திருச்சி ரோட்டை ஒட்டி துவங்கி சுமார், 1.5 கி.மீ.,க்கு மேல் நீள்கிறது.

மரங்கள் நிறைந்த இப்பகுதியில் மாலை வேளையில் சிறியவர், பெரியவர் என அனைத்து தரப்பினரும் நடைபயிற்சி செல்கின்றனர். இப்பகுதியில் அங்கும், இங்கும் என ஒருசில மின் விளக்குகள் மட்டுமே ஜொலிக்கின்றன. மீதமுள்ள விளக்குகள் சுத்தமாக எரிவதில்லை.

இதனால், இருள் சூழ்ந்த மரங்களுக்கு அடியே, குளக்கரையை ஒட்டி அமரும் இளம் ஜோடிகள், பொது இடம் என்றும் பார்க்காமல், அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

குழந்தைகளுடன் நடைபயிற்சி செய்வோரை, இச்செயல் முகம் சுழிக்கவைக்கிறது. 'யாரு பெத்த பிள்ளைங்களோ...இப்படி சீரழியுதுங்க' என்று வருத்தத்துடன் 'கமென்ட்' அடித்தவாறு கடந்து செல்கின்றனர். இதனால் மாலை வேளைகளில் சமீபகாலமாக இப்பகுதியில், வாக்கிங் செல்வோர் பலர், ரேஸ்கோர்ஸ் செல்லத்துவங்கி விட்டனர்.

இது, ஜோடிகளுக்கு மேலும் வசதியாகி விட்டது. பொதுமக்கள் வருகை குறைந்து போனதால், அருகருகே ஜோடி, ஜோடியாக அமர்ந்து எந்தவித லஜ்ஜையும் இல்லாமல், காம சேட்டைகளில் ஈடுபடுகின்றனர்.

பகலில் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவோர் சற்று குறைவு என்றாலும், பள்ளி, கல்லுாரி முடிந்து வரும் மாணவ, மாணவியர், வேலை முடிந்து வரும் ஜோடிகள் என பல்வேறு தரப்பினரும், இங்கு அத்துமீறலில் ஈடுபடுகின்றனர்.

மாலை மயங்கும் நேரத்தில், இளம் தலைமுறையினரின் இந்த 'நைட் ஷோ'க்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, இப்பகுதியில் பிரகாசமான மின் விளக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

அத்துமீறலில் ஈடுபடும் ஜோடிகளை, 'வாட்ச்மேன்' நியமித்து விரட்டுவது உள்ளிட்ட, பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது, இங்கு நடைபயிற்சி செய்வோரின் எதிர்பார்ப்பு.

ஆய்வு செய்துள்ளார்களாம்!

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வாலாங்குளக்கரையில் இதுபோன்ற அத்துமீறல்கள் குறித்து புகார்கள் வருகின்றன. எனவே, அப்பகுதியில் மின் விளக்குகளை அதிகரிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுக்கு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று(நேற்று முன்தினம்) இதுகுறித்து வாலாங்குளக்கரையில் ஆய்வு செய்துள்ளோம்' என்றனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-நவ-202206:28:50 IST Report Abuse
அப்புசாமி இது ஒன்றிய அரசின் உன்னத தயாரிப்பு..ஜோரா கை தட்டுங்க. இவங்க ஒண்ணும் குறைஞ்சவங்க இல்லை.யாரங்கே மத்திய அமைச்சர் நாலு பேரை அனுப்பி திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லச் சொல்லுங்க. முடிஞ்சா அண்ணாமலையையும் சேத்துக்கோங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X