என்னை கொல்ல கூலிப்படை பா.ஜ., 'மாஜி' எம்.எல்.ஏ., கதறல்

Added : நவ 25, 2022 | |
Advertisement
துமகூரு-துமகூரு ரூரல் சட்டசபை தொகுதியில், இன்னாள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்களின் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தன்னை இன்னாள் எம்.எல்.ஏ., கூலிப்படை வைத்து கொல்ல முயற்சிப்பதாக, பா.ஜ., 'மாஜி' எம்.எல்.ஏ., அலறுகிறார்.துமகூரு ரூரல் சட்டசபை தொகுதியில், தற்போது ம.ஜ.த.,வின் கவுரி சங்கர் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவருக்கும், பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடாவுக்கும், சமீப ஆண்டுகளாக
 என்னை கொல்ல கூலிப்படை பா.ஜ., 'மாஜி' எம்.எல்.ஏ., கதறல்



துமகூரு-துமகூரு ரூரல் சட்டசபை தொகுதியில், இன்னாள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்களின் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தன்னை இன்னாள் எம்.எல்.ஏ., கூலிப்படை வைத்து கொல்ல முயற்சிப்பதாக, பா.ஜ., 'மாஜி' எம்.எல்.ஏ., அலறுகிறார்.

துமகூரு ரூரல் சட்டசபை தொகுதியில், தற்போது ம.ஜ.த.,வின் கவுரி சங்கர் எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.

இவருக்கும், பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடாவுக்கும், சமீப ஆண்டுகளாக பனிப்போர் நடக்கிறது. 2018 சட்டசபை தேர்தலிலும் கூட, இவர்களே போட்டியாளர்களாக இருந்தனர்.

வரும் 2023 சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் வசைபாடுவது, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

இந்நிலையில், துமகூரில் நேற்று சுரேஷ் கவுடா கூறியதாவது:

என்னை கொலை செய்ய, கூலிப்படையை ஏவியுள்ளனர். எம்.எல்,ஏ., கவுரிசங்கரின் வலது கையான மகேஷ் என்பவர், முன்னாள் மேயர் கொலை வழக்கில் சிறையில் இருக்கிறார். இவரை தொடர்பு கொண்ட எம்.எல்.ஏ., கவுரி சங்கர், என்னை கொலை செய்யும்படி கூறியுள்ளார். இதற்காக, 5 கோடி ரூபாய் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

இதில் கவுரி சங்கருக்கு மட்டுமின்றி, தனியார் நகை கடை உரிமையாளர் பாபுவுக்கும் தொடர்பு உள்ளது. நான்கு மாதங்களாகவே, என்னை கொல்ல சதி நடப்பதாக, உளவுத்துறை மூலமாகவும், எனக்கு தகவல் வந்துள்ளது.

இது பற்றி விஜயதசமி பண்டிகைக்கு மறுநாள், முதல்வருக்கும், உள் துறை அமைச்சருக்கும் தகவல் தெரிவித்தேன். போலீஸ் கமிஷனருக்கும் புகார் அளித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இவருக்கு பதிலடி கொடுத்து, எம்.எல்.ஏ., கவுரி சங்கர் கூறியதாவது:

'மாஜி' எம்.எல்.ஏ., சுரேஷ்கவுடாவை கொலை செய்ய, நான் கூலிப்படையை ஏவியதாக குற்றம்சாட்டுகிறார்.

இதை கேட்டால் சிறு குழந்தைகளும், விழுந்து, விழுந்து சிரிப்பர்.

அவர் தோல்வி பயத்தால், இதுபோன்று பேசுகிறார்.

முந்தைய தேர்தலில் தோற்றதில் இருந்தே சுரேஷ் கவுடாவின் மனநிலை சரியில்லை. அவரை கொலை செய்ய, கூலிப்படையை ஏவியது உண்மை என்றால், அவர்களுடைய அரசுதானே உள்ளது. சி.பி.ஐ., விசாரணை நடத்தட்டும்.

'மாஜி' எம்.எல்.ஏ.,வின் குற்றச்சாட்டால், எனக்கும் கூட உயிர் பயம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட எஸ்.பி.,க்கும், உள்துறை அமைச்சருக்கும் புகார் அளித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X