திறந்த பின்னும் தீரவில்லை சிரமம் பஸ்களோ தாறுமாறு; பயணிகளோ தவிப்பு 

Added : நவ 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருப்பூர்:பஸ் ஸ்டாண்ட் திறந்தும், பஸ்கள் உள்ளே வந்து செல்வது, நிறுத்துவதில் முறையான திட்டமிடல் இல்லாததால், பொது மக்களுக்கான சிரமம் தொடர்கிறது. இவ்விஷயத்தில் கலெக்டர் தலையிட்டு தெளிவான வழிகாட்டுதல்களை அறிவிக்க வேண்டியது அவசியம்.மத்திய அரசின் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ், திருப்பூரில் புதியதாக கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்ட் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. எந்த
 திறந்த பின்னும் தீரவில்லை சிரமம் பஸ்களோ தாறுமாறு; பயணிகளோ தவிப்பு 

திருப்பூர்:பஸ் ஸ்டாண்ட் திறந்தும், பஸ்கள் உள்ளே வந்து செல்வது, நிறுத்துவதில் முறையான திட்டமிடல் இல்லாததால், பொது மக்களுக்கான சிரமம் தொடர்கிறது. இவ்விஷயத்தில் கலெக்டர் தலையிட்டு தெளிவான வழிகாட்டுதல்களை அறிவிக்க வேண்டியது அவசியம்.

மத்திய அரசின் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ், திருப்பூரில் புதியதாக கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்ட் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. எந்த ஊருக்கு செல்லும் பஸ், எங்கு நிற்க வேண்டும் என அங்காங்கே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், கோவை, பொள்ளாச்சி, உடுமலை செல்லும் பஸ்கள் மட்டுமே அந்தந்த ரேக்கில் நிற்கிறது. கொடுவாய், காங்கயம், பொங்கலுார், ஊத்துக்குளி செல்லும் பஸ்கள் எந்த இடத்தில் நிற்கிறது என்பதை போக்குவரத்து அதிகாரிகளே கண்டுபிடிக்க முடியவில்லை. பயணிகள் பாடு பெரும் திண்டாட்டமாக உள்ளது.


தகவல் மையத்துக்கு பூட்டு



பயணிகளுக்கு தேவையான தகவல்களை வழங்க பஸ் ஸ்டாண்டில் தகவல் மையம் போக்குவரத்து துறையால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பஸ் ஸ்டாண்ட் திறந்து இரு நாட்களாகியும், தகவல் மையம் பூட்டியே கிடக்கிறது. போக்குவரத்து கழக அலுவலர்கள் யாரும் அங்கில்லை. உதகை, மேட்டுப்பாளையம், மைசூர், பண்ணாரி, கொடைக்கானல் பஸ்கள் நிற்குமிடம், நேரம் எழுதப்பட்டுள்ளது. பஸ்கள் மத்திய பஸ் ஸ்டாண்டுக்கு வராது. புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறையினரே நேற்று முன்தினம் தெரிவித்தனர். இதனால், பஸ் ஏற வரும் பயணிகள் குழம்பி போகின்றனர்.


சொன்னது என்னாச்சு !



பஸ் ஸ்டாண்ட் திறந்த பின், மினி பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் முன்புறம் இருந்து இயங்குமென அறிவிக்கப்பட்டது. ஆனால், போலீசார், போக்குவரத்து அதிகாரிகள் ஒருங்கிணைந்து கண்காணிக்காததால், சர்வீஸ் பஸ்களுடன், மினி பஸ்களும் நேற்று பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்தது. இருக்கும் குறைந்த இடத்தில் இடையூறு அதிமாகிறது. விலாசமான இரு நுழைவு வாயில் உள்ள போதும், தெற்கு வாயில் திறக்கப்படாமல், வடக்கு வாயில் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.


விபத்து அபாயம்



ஒரே நேரத்தில் பஸ்கள் பல அணிவகுத்து பஸ் ஸ்டாண்டுக்குள் செல்வதும், பஸ்கள் அதே வழியில் வேகமாக வெளியேறுவதும், பயணிகள் பயத்துடன் அவ்விடத்தை கடக்கும் சூழலும் உள்ளது.

பஸ் ஸ்டாண்டுக்குள் மினிபஸ்களுக்கு இடம் ஒதுக்கவில்லை. ஆனால், ஓரமாக நிற்காமல் நடுவில் நிறுத்தப்படும் மினி பஸ்கள், டவுன் பஸ்களை கடந்து, அசுர வேகத்தில் முன்னேறி வெளியே வர முற்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பஸ்கள் நிற்குமிடம் தெளிவாக தெரியாததால், பயணிகள் சக பயணியரிடம் எங்கு பஸ்கள் நிற்கும் என இங்கும், அங்கும் கேட்டு அலைந்து திரிந்தனர். மொத்தத்தில் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டதே தவிர, பொதுமக்களின் அலைச்சல் குறையவில்லை. ரோட்டில் இதுவரை தடுமாறிய மக்கள், தற்போது பஸ் ஸ்டாண்ட்டுக்குள் தடுமாறுகின்றனர்.


கலெக்டர் தலையிடுவாரா?



மக்களின் சிரமத்தை போக்க, கலெக்டர் தலைமையில், மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் ஆலோசனை நடத்தி, உடனடியாக பஸ் நிற்குமிடம், வழித்தடம் குறித்து தெளிவான முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அப்புபண்டிட்ஜி ஸ்மார்ட் சிட்டி ஹைன்.. மத்லப் ஸ்மார்ட்டா ஆட்டையப் போடும் திட்டம் ஹைன். எங்கே அந்த 75 இணை, துணை மந்திரிங்க? கஹா சலே கயே யார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X