பெட்டிக்குள்ளே அப்படி என்னதான் இருக்கு? வெடிபொருள் வினியோகம் தடுக்க... கூரியர் நிறுவனங்களுடன் இன்று ஆலோசனை

Added : நவ 25, 2022 | |
Advertisement
கோவை:'கூரியர் மற்றும் ஆன்லைன் நிறுவனங்கள், டோர் டெலிவரி செய்யப்படும் பொருள் என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும்' என்று அறிவுறுத்தியுள்ள போலீசார், இது தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு இன்று ஏற்பாடு செய்துள்ளனர்.கோவையில் அக்.,23ல் நடந்த கார் குண்டு வெடிப்பில், ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபீன் பலியானார். வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்.ஐ.ஏ., தனிப்படையினர் வழக்கை

கோவை:'கூரியர் மற்றும் ஆன்லைன் நிறுவனங்கள், டோர் டெலிவரி செய்யப்படும் பொருள் என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும்' என்று அறிவுறுத்தியுள்ள போலீசார், இது தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு இன்று ஏற்பாடு செய்துள்ளனர்.

கோவையில் அக்.,23ல் நடந்த கார் குண்டு வெடிப்பில், ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபீன் பலியானார். வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்.ஐ.ஏ., தனிப்படையினர் வழக்கை விசாரிக்கின்றனர். போலீஸ் முதல் கட்ட விசாரணையில், ஜமேஷா முபீன் வீட்டில் ஏராளமான வெடிபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வெடிபொருட்களை, தன் நண்பர்கள் உதவியுடன் ஆன்லைன் இணையதளங்களில், கொள்முதல் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஆன்லைன் மூலம் வெடிபொருட்கள் விற்பனை மற்றும் டோர் டெலிவரிக்கு 'செக்' வைக்க முடிவு செய்துள்ள போலீசார், சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள், கட்டாயம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தெரிவித்துள்ளனர்.

டோர் டெலிவரி செய்யப்படும் பொருள் என்ன என்பதை, சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர், டெலிவரி செய்யும் ஏஜென்சியினர் அறிந்திருக்க வேண்டும்.

வெடிபொருளாக இருக்கும் பட்சத்தில், ஆர்டர் செய்தவர் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று, ஏற்கனவே இணையதள நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, போலீசார் உருவாக்கியுள்ள புதிய விதிமுறைகள் பற்றி தெரிவிப்பதற்காக, இன்று மதியம், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பிரத்யேக கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கமிஷனர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், இணையதள நிறுவனங்களின் அலுவலர்கள், அவர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள், கூரியர் வினியோக ஏஜென்சியினர் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X