'இந்திய கரன்சி மதிப்பு சரியவில்லை ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை'

Added : நவ 25, 2022 | |
Advertisement
திருப்பூர்:''அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு குறைந்தாலும், பெரும்பாலான உலக கரன்சிகளை போல் சரியவில்லை. இது, ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்,'' என, 'பியோ' தலைவர் சக்திவேல் கூறினார்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தயாரிப்புக்கு முந்தைய ஆலோசனை கூட்டங்களை பல்வேறு தரப்பினருடன் மேற்கொண்டுள்ளார்.காணொலி வாயிலாக நடந்த ஆலோசனைக்
 'இந்திய கரன்சி மதிப்பு சரியவில்லை ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை'

திருப்பூர்:''அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு குறைந்தாலும், பெரும்பாலான உலக கரன்சிகளை போல் சரியவில்லை. இது, ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்,'' என, 'பியோ' தலைவர் சக்திவேல் கூறினார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தயாரிப்புக்கு முந்தைய ஆலோசனை கூட்டங்களை பல்வேறு தரப்பினருடன் மேற்கொண்டுள்ளார்.

காணொலி வாயிலாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பான பியோ தலைவர் சக்திவேல் பங்கேற்று பேசியதாவது:

அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு குறைந்தாலும், பெரும்பாலான உலக கரன்சிகளை போல நம் கரன்சி சரியவில்லை. இது, ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். இது, நம் பொருளாதார வளர்ச்சியின் பிரதிபலிப்பு.

சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு சந்தைப்படுத்த உரிய ஆதரவு தர வேண்டும். சந்தைப்படுத்தலுக்கு, முந்தைய ஆண்டு ஏற்றுமதியில் குறைந்தபட்சம் 0.5 சதவீதம் கார்பஸ் நிதியுடன் ஒரு ஏற்றுமதி மேம்பாட்டு நிதியை உருவாக்க வேண்டும்.

இதற்காக, ஏற்றுமதியாளர் செலவுக்கு உரிய அதிகபட்ட வரி விலக்கு அளிக்க வேண்டும்.

பெரும்பாலான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வீதம் இரட்டை இலக்க குறியை கடந்து விட்டது.

தற்போது 11 முதல் 13 சதவீதத்தில் உள்ளது; இது இன்னும் அதிகரிக்கும்.

அக்., 2021க்கு முன் இருந்த வட்டி சமன்படுத்தும் பலன்களான, 5 சதவீதம் உற்பத்தி நிறுவனங்களுக்கும், 3 சதவீதம் பிற 410 கட்டண கோடுகளுக்கும் மீட்டெடுக்க வேண்டிய அவசர தேவை உள்ளது.

விமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஜி.எஸ்.டி., ரீபண்ட் வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால், சுற்றுலா மட்டுமின்றி கைவினைப் பொருள், நகை, தரை விரிப்புகள், ஜவுளி, காதி, தோல் பொருள், ஆயுஷ் மற்றும் மூலிகை பொருட்கள் அழகு சாதன பொருட்கள் போன்றவற்றின் ஏற்றுமதிக்கு உதவும்.

இவ்வாறு சக்திவேல் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X