மருதமலை நடை திறப்பு நேரம் அதிகரிக்கணும்! வெளியூர் பக்தர்கள் வசதிக்காக கோரிக்கை

Added : நவ 25, 2022 | |
Advertisement
கோவை:வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக, மருதமலையில் நடை திறப்பு நேரத்தை அதிகப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.கோவையில், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது மருதமலை. இதிலுள்ள சுப்பிரமணியர் கோவில், முருகனின் ஏழாம் படை வீடாக, பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த கோவில், கோவை வனக்கோட்டத்தில் காப்புக்காட்டுக்குள் அமைந்துள்ளது.

கோவை:வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக, மருதமலையில் நடை திறப்பு நேரத்தை அதிகப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோவையில், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது மருதமலை. இதிலுள்ள சுப்பிரமணியர் கோவில், முருகனின் ஏழாம் படை வீடாக, பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த கோவில், கோவை வனக்கோட்டத்தில் காப்புக்காட்டுக்குள் அமைந்துள்ளது. அந்த வனப்பகுதியில், யானை, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்களும் வாழ்கின்றன. இரவு நேரங்களில், மலைக்கோவில் படிக்கட்டுகளிலும், மலைப்பாதைகளிலும் இவை வலம் வருவதுண்டு.

சில மாதங்களுக்கு முன்பு, அதிகாலையில் மலைக்கோவிலுக்கு அருகில் சிறுத்தை நடமாடுவது, சிசிடிவி கேமரா பதிவில் இருந்தது. அதன் காரணமாக, கோவில் நடை திறப்பு நேரம் குறைக்கப்பட்டது.

அதற்கு முன் 9:00 மணி வரை திறந்திருந்த கோவில் நடை, 7:00 மணிக்கே மூடப்பட்டது. கோவில் நடை மூடப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு, அடிவாரத்திலிருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

முன்பு இரவு 8:30 மணி வரை அனுமதிக்கப்பட்ட வாகனங்கள், சிறுத்தை நடமாட்டத்துக்குப் பின் 6:30 மணிக்கு மேலே விடப்படுவதில்லை.

தற்போது அதிகளவில் வரும் சபரிமலை பக்தர்கள், இதுபற்றி தெரியாமல், மாலை நேரத்தில் வந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். குறைந்தபட்சம் 8:00 மணி வரை கோவில் நடையைத் திறக்க வேண்டும்; அதற்கு அரை மணி நேரம் முன்பு வரை, வாகனங்களை அனுமதிக்க வேண்டுமென்று பக்த அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

ஆனால் வனத்துறையினர், இப்போதுள்ள நேரத்தையும் குறைக்குமாறு அறிவுறுத்துவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

வன உயிரின நடமாட்டம் காரணமாக, இரவில் நடை விரைவாக சாத்தப்படுவதால், மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை, கோவில் நடை மூடுவதைத் தவிர்க்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கூட்டம் அதிகமாகவுள்ள நாட்களில், மதியம் நடை சாத்தப்படுவதில்லை. அதேபோல எல்லா நாட்களிலும், மதியம் கோவில் நடையை மூடாமல், தொடர்ந்து தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டுமென்று, பக்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து, மருதமலை சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில் துணை கமிஷனர் ஹர்சினியிடம் கேட்டபோது, ''மதியம் சுத்தம் செய்வதற்காக மட்டுமே, நடை மூடப்படுகிறது. அதுவும் கூட்டம் அதிகமாக இருந்தால் மூடப்படுவதில்லை. கூட்டத்தைப் பொறுத்து, மதியம் கோவில் நடை திறப்பது பற்றி முடிவெடுக்கப்படுகிறது,'' என்றார்.

சுத்தம் செய்ய 10 நிமிடங்களை மட்டும் ஒதுக்கி, மீதி நேரத்தில் கோவில் நடை திறப்பதற்காவது நடவடிக்கை எடுத்தால் நல்லது!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X