தங்கவயல் நகராட்சி கமிஷனர் மீண்டும் மாற்றம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
தங்கவயல்-தங்கவயல் நகராட்சி கமிஷனராக இருந்த மாதவி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 கமிஷனர்கள் பொறுப்பில் இருந்தனர். வந்தவர்கள், சில மாதங்களே பதவியில் இருந்து விட்டு, இடம் பெயர்ந்து விட்டனர்.தங்கவயல் டவுன் முனிசிபாலிடியாக 1964ல் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து, சிட்டி முனிசிபாலிட்டியாக உயர்ந்த போதும் இதுபோன்று ஆணையர்கள்
 தங்கவயல் நகராட்சி கமிஷனர் மீண்டும் மாற்றம்



தங்கவயல்-தங்கவயல் நகராட்சி கமிஷனராக இருந்த மாதவி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 கமிஷனர்கள் பொறுப்பில் இருந்தனர். வந்தவர்கள், சில மாதங்களே பதவியில் இருந்து விட்டு, இடம் பெயர்ந்து விட்டனர்.

தங்கவயல் டவுன் முனிசிபாலிடியாக 1964ல் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து, சிட்டி முனிசிபாலிட்டியாக உயர்ந்த போதும் இதுபோன்று ஆணையர்கள் இடமாற்றம் நடந்ததே இல்லை. நகராட்சி தலைவர்கள் தான் அவ்வப்போது மாறுவர்.

தற்போது தங்கவயல் நகராட்சியில், காங்கிரசின் முனிசாமி தலைவர் பதவியேற்று இரண்டு ஆண்டு ஆகிறது.

அப்போது கமிஷனராக ராஜு பதவியில் இருந்தார்.

அவரை தொடர்ந்து ஸ்ரீதர், சர்வர் மெர்சன்ட், நவீன் சந்திரா, வித்யா காலே, மீண்டும் நவீன் சந்திரா, மாதவி, ஜெஹீரா பானு, மீண்டும் மாதவி ஆகியோர் சில நாட்கள், சில மாதங்கள் ஆணையர் பதவியில் இருநதனர்.

கமிஷனராக இருந்த மாதவி, பா.ஜ.,வினருக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்பதால், மாற்றம் செய்யப்பட்டதாக, அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, மாதவி பெங்களூரில் உள்ள பி.எம்.ஆர்.டி.ஏ., என்றபெங்களூருமெட்ரோ பாலிடன் மண்டல வளர்ச்சி ஆணைய இணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவர், மூன்று மாதம் மட்டுமே தங்கவயல் நகராட்சி ஆணையராக பதவியில் இருந்தார்.

மாலுார் டவுன் சபை தலைமை அதிகாரி பவன் குமாருக்கு, தங்கவயல் நகராட்சி கமிஷனர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X