சண்டை காட்சியில் மூச்சு திணறல் நடிகர் உபேந்திராவுக்கு சிகிச்சை

Added : நவ 25, 2022 | |
Advertisement
நெலமங்களா-சண்டை காட்சியின் போது, மூச்சு திணறலால் அவதிப்பட்ட நடிகர் உபேந்திரா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றார்.'கன்னட சூப்பர் ஸ்டார்' என அழைக்கப்படுபவர் நடிகர் உபேந்திரா, ௫௪. இவர் தமிழில் விஷாலுடன் 'சத்யம்' படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், பெங்களூரு ரூரல் நெலமங்களாவில் உள்ள மோகன் பி. கரே
 சண்டை காட்சியில் மூச்சு திணறல் நடிகர் உபேந்திராவுக்கு சிகிச்சை



நெலமங்களா-சண்டை காட்சியின் போது, மூச்சு திணறலால் அவதிப்பட்ட நடிகர் உபேந்திரா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றார்.

'கன்னட சூப்பர் ஸ்டார்' என அழைக்கப்படுபவர் நடிகர் உபேந்திரா, ௫௪. இவர் தமிழில் விஷாலுடன் 'சத்யம்' படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், பெங்களூரு ரூரல் நெலமங்களாவில் உள்ள மோகன் பி. கரே ஸ்டூடியோவில் 'யு அண்ட் ஐ' படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது.

இதில் நடிகர் உபேந்திரா, நடிகை ரச்சிதா ராம் உட்பட பலர் நடிக்கின்றனர். நேற்று சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன.

அப்போது மண் துகள்கள் அதிகமாக இருக்கவே, உபேந்திராவுக்கு மூச்சு திணறல் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நெலமங்களாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிறிது நேர சிகிச்சைக்கு பின், உடல் நலம் தேறியது. மருத்துவமனையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின், அங்கிருந்து படப்பிடிப்பு தளத்துக்கு திரும்பினார். உபேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்த உடன், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நடிகர் உபேந்திரா படப்பிடிப்பு தளத்தில் இருந்தபடியே, முகநுால் நேரலையில் வீடியோ வெளியிட்டார்.அதில் 'நான் படப்பிடிப்பு தளத்தில் இருக்கிறேன். நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன். யாரும் பயப்பட வேண்டாம்' என, கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X