ஊராட்சி செயலர்கள் ஒட்டுமொத்த விடுப்பு!

Added : நவ 25, 2022 | |
Advertisement
அவிநாசி:ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தத்தால், கடந்த இரண்டு நாட்களாக அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.ஊரக வளர்ச்சித் துறையில் விடுமுறை தின ஆய்வு, இரவு நேர ஆய்வு ஆகியவற்றை கைவிட வேண்டும். ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும், கருவூலம் வாயிலாக சம்பளம் வழங்க வேண்டும். நுாறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளர்கள் மற்றும் வட்டார சுகாதார

அவிநாசி:ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தத்தால், கடந்த இரண்டு நாட்களாக அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

ஊரக வளர்ச்சித் துறையில் விடுமுறை தின ஆய்வு, இரவு நேர ஆய்வு ஆகியவற்றை கைவிட வேண்டும். ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும், கருவூலம் வாயிலாக சம்பளம் வழங்க வேண்டும். நுாறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளர்கள் மற்றும் வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும்.

பல ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி உயர்வு ஆணைகளை தாமதம் இல்லாமல் வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 2 நாட்களாக, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், விடுமுறை எடுத்து, தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அதன்படி, அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும், 36 பேரில், 16 பேர் விடுமுறை போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சி அலுவலகங்களில் பணிபுரியும், 26 ஊராட்சி செயலர்களும் ஒட்டு மொத்தமாக விடுப்பில் ஈடுபட்டனர். இதனால், ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X