சிறார் வழக்கை கையாள்வது எப்படி? அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு!

Added : நவ 25, 2022 | |
Advertisement
சென்னை:சிறார் வழக்குகளை கையாள்வது குறித்து போலீஸ் துறை, குழந்தைகள் நல வாரியம், மருத்துவத் துறை உள்ளிட்டோர் கலந்து ஆலோசித்து அறிக்கை அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் பள்ளி மாணவியின் கழுத்தில் சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டும் காட்சி, சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, வீட்டில் இருந்த மாணவியை, அரசு காப்பகத்தில், மாவட்ட

சென்னை:சிறார் வழக்குகளை கையாள்வது குறித்து போலீஸ் துறை, குழந்தைகள் நல வாரியம், மருத்துவத் துறை உள்ளிட்டோர் கலந்து ஆலோசித்து அறிக்கை அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் பள்ளி மாணவியின் கழுத்தில் சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டும் காட்சி, சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, வீட்டில் இருந்த மாணவியை, அரசு காப்பகத்தில், மாவட்ட குழந்தைகள் நலக் குழு சேர்த்தது. மாணவனுக்கு எதிராக, சிதம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மாணவியின் தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை, நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையிலான அமர்வு விசாரித்தது. உடனடியாக மாணவியை பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. மாணவனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இவ்வழக்கு, மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. சமூக வலைதளங்கள் வாயிலாக ஏற்படும் அழுத்தத்தால், அதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர். சட்டம் தெளிவாக இருப்பதாகவும், அதை அமல்படுத்துவதில் தான் சிக்கல் உள்ளதாகவும், நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சந்துரு தெரிவித்தார்.

இதையடுத்து, 'கைது நடவடிக்கைகளுக்கு உயர் அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்' என்ற நீதிபதிகள், சிறார் தொடர்பான வழக்குகளை எப்படி கையாள்வது என்பது குறித்து போலீஸ் துறை, மருத்துவத் துறை, குழந்தைகள் நல வாரியம், வழக்கறிஞர் ஆகியோர் கலந்து ஆலோசித்து, அறிக்கை அளிக்கும்படி, உத்தரவிட்டனர்.

விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X