கனிமவளத்துறையினர், போலீசார் 'அசட்டை' : கேரளாவுக்கு கடத்தப்படும் கனிமவளம் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார்

Added : நவ 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருப்பூர்:தாராபுரம், உடுமலை பகுதிகளிலிருந்து கனிமவளங்கள், கேரளாவுக்கு கடத்தப்படுவது தொடர்வதாக, குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார்.மவுனகுருசாமி: உடுமலை, பெதப்பம்பட்டியில், நீர் வழித்தடத்தில்,
 கனிமவளத்துறையினர், போலீசார் 'அசட்டை' : கேரளாவுக்கு கடத்தப்படும் கனிமவளம் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார்

திருப்பூர்:தாராபுரம், உடுமலை பகுதிகளிலிருந்து கனிமவளங்கள், கேரளாவுக்கு கடத்தப்படுவது தொடர்வதாக, குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார்.

மவுனகுருசாமி: உடுமலை, பெதப்பம்பட்டியில், நீர் வழித்தடத்தில், கேரளாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கழிவுகளை கொட்டுகின்றனர். அளவீடு செய்யாததாலோ என்னவோ, குண்டடம் பகுதியில் சில விவசாயிகளுக்கு, 15 ஆயிரம், 16 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது.

வேலுசாமி (பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை வாய்க்கால் நீர் பாதுகாப்பு சங்கம்):

பி.ஏ.பி, பாசனத்தில், மூன்றாம் மண்டலத்தின் முதல் சுற்றில், வெள்ளகோவில் கிளைக்கு உரிய தண்ணீரை முறையாக வழங்கவேண்டும். பாசன சங்க தலைவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கவேண்டும் என ஐந்து மாதங்களுக்கு முன்பே கோரிக்கை வைத்தோம்; ஆனால் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

காட்டுப்பன்றி அட்டகாசம்

விவசாயி பழனிசாமி: தாராபுரம் அலங்கியத்தில் காட்டுப்பன்றிகள், விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. விவசாய பணிக்கு வர தொழிலாளர்கள் தயங்குகின்றனர். குடிமங்கலத்தில், காட்டுப்பன்றிகளால், விவசாய பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. பன்றி தாக்கியதில், பெண் தொழிலாளி, காயமடைந்தார். பன்றிகள் வராமல் கட்டுப்படுத்த வேண்டும்.

மதுசூதனன்: திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக கனிம வளங்கள் கொள்ளைபோகின்றன. விவசாயத்தை சார்ந்துள்ள தாராபுரம், உடுமலை பகுதிகளில் இருந்து அதிகளவு கனிம வளங்கள் எடுக்கப்படுகின்றன. இங்கிருந்து, முறைகேடாக, கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. செக்போஸ்ட்களை கடந்து, போலீசார், கனிமவள அதிகாரிகளுக்கு தெரியாமல், மாநிலம் விட்டு மாநிலம் கனிம வளம் எப்படி கடத்தப்படுகிறது என்கிற சந்தேகம் எழுகிறது.

பாலதண்டாயுதபாணி: அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை முழுமைக பராமரிக்காததால், கடந்தாண்டு இடை நிற்றல் அதிகரித்து, பிழி திறன் பாதிக்கப்பட்டது. இதனால், விவசாயிகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டது. நடப்பு ஆண்டு, அரசிடமிருந்து கூடுதல் நிதி வாங்கி, ஆலையை முழுமையாக பராமரிக்கவேண்டும்.

ஈஸ்வரமூர்த்தி (உ.உ.கட்சி): அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன வாய்க்காலில் புதர் மண்டியுள்ளது. முட்புதர்களை அகற்றவேண்டும். கோர்ட் உத்தரவுப்படி, பி.ஏ.. அமைக்க நிலம் வஙழ்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்.

சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், உதவி கலெக்டர் (பயிற்சி) பல்லவி வர்மா, வேளாண் இணை இயக்குனர் மாரியப்பன், ஊகர வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் உள்பட அதிகாரிகள் விவசாயிகளின் மனுக்களை பெற்று, நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கினர்.

--------------------------

பட விளக்கம்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளில் ஒரு பகுதியினர்.

அதிகரிக்கும் ஆடு திருட்டு

திருப்பூர் மாவட்டத்தில், வெள்ளகோவில், தாராபுரம், ஊதியூர் பகுதிகளில் ஆடு திருட்டு அதிகரித்துள்ளது. ஒரு ஆடு, 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. திருட்டு காரணமாக, விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும், திருடர்களை கண்டுபிடிக்க முடியவில்லை, என குறைகேட்பு கூட்டத்தில், விவசாயிகள் சிலர், தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X