திறமையை நிரூபித்த மாணவர் பரிசு வழங்கி கவுரவிப்பு

Added : நவ 25, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூர் அருகே கணியாம்பூண்டியிலுள்ள தி சென்ட்ரல் ஸ்கூலில் நடந்த விழாவில், சேலத்தில் நடந்த தமிழ்நாடு பஞ்சாயதி யுவ க்ருத கேல் அபியான்' சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான தடகள போட்டிகளில் இரண்டு தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் நான்கு வெண்கல பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டன.இதுதவிர, 11ம் தேதி நடந்த கால்பந்து போட்டியில், 10 வயதிற்கு
 திறமையை நிரூபித்த மாணவர் பரிசு வழங்கி கவுரவிப்பு

திருப்பூர்:திருப்பூர் அருகே கணியாம்பூண்டியிலுள்ள தி சென்ட்ரல் ஸ்கூலில் நடந்த விழாவில், சேலத்தில் நடந்த தமிழ்நாடு பஞ்சாயதி யுவ க்ருத கேல் அபியான்' சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான தடகள போட்டிகளில் இரண்டு தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் நான்கு வெண்கல பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டன.

இதுதவிர, 11ம் தேதி நடந்த கால்பந்து போட்டியில், 10 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடத்திய கலை, இலக்கிய போட்டிகளில் ஆங்கில பேச்சு போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற சாய் சர்வதேவ் (ஏழாம் வகுப்பு) மற்றும் கவிதை போட்டியில் மூன்றாமிடம் பெற்ற தம்சியா (பத்தாம் வகுப்பு) ஆகியோருக்கும் பரிசளிக்கப்பட்டன.

வித்யா மந்திர் பள்ளியில் சேவா பாரதி தென் தமிழ்நாடு சார்பில் நடத்தப்பட்ட பஜனை போட்டியில் குழு பஜனை பிரிவில் மூன்றாமிடம் பெற்ற எட்டாம் வகுப்பு மாணவிகள் அனுபிரியா, ஐஸ்வர்யா, கனிஷ்கா, இனிகா மற்றும் சாத்விகா ஆகியோருக்கும் பள்ளி தாளாளர் முருகசாமி, பள்ளி அறக்கட்டளை தலைவர் தர்மமூர்த்தி ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X