ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் 'எக்ஸ்பிரஸ்' வேக தரமற்ற பணி

Added : நவ 25, 2022 | |
Advertisement
கோவை;பாதாள சாக்கடைப் பணி மேற்கொள்ளப்பட்ட கோவை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், தற்போது குழிகளை மூடி, ஒழுங்கற்ற முறையில் சிமென்ட் ரோடு அமைக்கப்பட்டிருப்பது, வாகன ஓட்டிகளைத் தடுமாற வைக்கிறது.கோவை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், கலெக்டர் ஆபீஸ், மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ், எஸ்.பி.,ஆபீஸ், தீயணைப்புத் துறை மற்றும் ஸ்டேட் பேங்க் பிரதான வங்கிக் கிளை ஆகியவை அமைந்திருப்பதால், இந்த ரோட்டில்
 ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் 'எக்ஸ்பிரஸ்' வேக தரமற்ற பணி

கோவை;பாதாள சாக்கடைப் பணி மேற்கொள்ளப்பட்ட கோவை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், தற்போது குழிகளை மூடி, ஒழுங்கற்ற முறையில் சிமென்ட் ரோடு அமைக்கப்பட்டிருப்பது, வாகன ஓட்டிகளைத் தடுமாற வைக்கிறது.

கோவை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், கலெக்டர் ஆபீஸ், மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ், எஸ்.பி.,ஆபீஸ், தீயணைப்புத் துறை மற்றும் ஸ்டேட் பேங்க் பிரதான வங்கிக் கிளை ஆகியவை அமைந்திருப்பதால், இந்த ரோட்டில் எப்போதுமே பரபரப்பான போக்குவரத்து காணப்படும்.

அதேபோல, போக்குவரத்து நெரிசலுக்கும் குறைவிருக்காது. இந்த ரோட்டில் உள்ள இரு வழிப்பாதையில், கலெக்டர் ஆபீசிலிருந்து லங்கா கார்னர் செல்லும் பாதையில், சமீபத்தில் பாதாள சாக்கடைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்தப் பணிகள் முடிவடைந்து, குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகள், சமீபத்தில் சிமென்ட் கான்கிரீட்டால் மூடப்பட்டன.

மாநில நெடுஞ்சாலைகளில் இத்தகைய குழிகளை மூட, 'வெட்மிக்ஸ்' பயன்படுத்துவது கடும் விமர்சனத்துக்கு உள்ளானதால், இந்த ரோட்டில் சிமென்ட் போட்டு, குழிகள் மூடப்பட்டுள்ளன.

ஆனால் ஒழுங்கற்ற முறையில், அவசர கதியில் இந்தப் பணி நடந்திருப்பதால், சிமென்ட் போட்டு மூடிய இடங்கள் மேடும் பள்ளமுமாக இருக்கின்றன. இதனால் டூ வீலர், ஆட்டோக்கள் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தரமின்றி, ஒழுங்கற்ற முறையில் நடந்துள்ள இந்தப் பணியை, கலெக்டர், மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி கமிஷனர் இணைந்து ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் நன்றாகச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே கோவை மக்களின் கோரிக்கை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X