ரூ.5 கோடியில் புது பொலிவு பெற்ற பைரசந்திரா ஏரி

Added : நவ 25, 2022 | |
Advertisement
சி.வி.ராமன் நகர்-கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசிய சி.வி.ராமன் நகர் தொகுதியின் பைரசந்திரா ஏரி, தற்போது 4.9 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் திறக்கப்படுவதால் அப்பகுதியினரின் நீண்ட நாள் கனவு நனவாகிறது.பெங்களூரு சி.வி.ராமன் நகர் சட்டசபை தொகுதிகுட்பட்ட பைரசந்திரா ஏரியில், ஆகாய தாமரை செடிகள், கழிவுகள் நிறைந்து காணப்பட்டது. ஏரியில் கழிவுநீர் கலந்து
 ரூ.5 கோடியில் புது பொலிவு பெற்ற பைரசந்திரா ஏரி



சி.வி.ராமன் நகர்-கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசிய சி.வி.ராமன் நகர் தொகுதியின் பைரசந்திரா ஏரி, தற்போது 4.9 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் திறக்கப்படுவதால் அப்பகுதியினரின் நீண்ட நாள் கனவு நனவாகிறது.

பெங்களூரு சி.வி.ராமன் நகர் சட்டசபை தொகுதிகுட்பட்ட பைரசந்திரா ஏரியில், ஆகாய தாமரை செடிகள், கழிவுகள் நிறைந்து காணப்பட்டது. ஏரியில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசியது. பல வகையான செடிகள் வளர்ந்து, புதர் போன்று காட்சியளித்தது.

மொத்தம், 12.21 ஏக்கர் பரப்பளவில் உள்ள பைரசந்திரா ஏரியில், 7.1 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது.

ஏரியை சுற்றி பல பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள், ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் டி.ஆர்.டி.ஓ., தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

இதை சீர்ப்படுத்தும்படி அப்பகுதியினர் வலியுறுத்தினர். இதையறிந்த தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., ரகு, தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 4.9 கோடி ரூபாயில், 2019ல் ஏரியை மேம்படுத்தும் பணியை ஆரம்பித்தார். கொரோனாவால் பணிகள் தாமதமானது.

தற்போது ஏரி முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. நடை பயிற்சி மேற்கொள்ள நடை பாதை, அதை சுற்றி ஓய்வெடுக்க இருக்கைகள் போடப்பட்டுள்ளன. 'பச்சை பசேல்' என்று காணப்படும் புற்கள், மரங்கள் வளர்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, ஏரியை சுற்றி மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

மேலும், கழிவுநீர் கலக்காதவாறு பாதாள சாக்கடை வசதி செய்யப்பட்டுள்ளது. ஏரி நிரம்பும்பட்சத்தில், மழை நீர் கால்வாய்க்குள் செல்லும் வகையில் துணை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

விரைவில் நடை பயிற்சிக்காக பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது. திறப்பதற்கு முன்பே, பெண்கள், முதியோர் என பலரும் ஆர்வத்துடன் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X