மார்க்கெட்களில் கமிஷனர் ஆய்வு திட்ட மதிப்பீடு தயாரிக்க உத்தரவு

Added : நவ 25, 2022 | |
Advertisement
கோவை:சுந்தராபுரம் தக்காளி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வடிகால் போன்ற வசதிகளை மேம்படுத்த, திட்டமதிப்பீடு தயாரிக்குமாறு பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.காய்கறி மார்க்கெட்களில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், மழை காலங்களில் பெரும் சிரமங்களை சந்திப்பதாக, வியாபாரிகள் புலம்புகின்றனர். குறிப்பாக, எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டில் சேறும்,

கோவை:சுந்தராபுரம் தக்காளி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வடிகால் போன்ற வசதிகளை மேம்படுத்த, திட்டமதிப்பீடு தயாரிக்குமாறு பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காய்கறி மார்க்கெட்களில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், மழை காலங்களில் பெரும் சிரமங்களை சந்திப்பதாக, வியாபாரிகள் புலம்புகின்றனர். குறிப்பாக, எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டில் சேறும், சகதியுமான ரோடு, குப்பை அள்ளுவதில்லை போன்ற புகார்களை வியாபாரிகள் அடுக்குகின்றனர்.

இந்நிலையில், மாநகராட்சி தெற்கு மண்டலம் சுந்தராபுரத்தில் உள்ள தக்காளி மார்க்கெட், மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர்., மார்க்கெட், அண்ணா மார்க்கெட் ஆகிய இடங்களில், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆய்வு செய்தார். அப்போது, மழைநீர் வடிகால்கள், கழிவறைகள், பாதாள சாக்கடை உள்ளிட்டவற்றை புனரமைக்க தேவையான திட்டமதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்ப, பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X